ஏசி ஓவர்.. ஹீட்டரை போடும் இயற்கை! வேலையை காட்டப் போகும் சூரியனார்! 4 ஊருக்காரங்க மட்டும் எஸ்கேப்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக திண்டுக்க, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மெட் கூறியுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. பொதுவாக ஆவணி மாதத்தில் ஓரளவு தான் மழை இருக்கும் என்றாலும் தற்போது நல்ல மழைப் பொழிவு இருக்கிறது.

tamil nadu rain rain


இதனால் ஆடிப்பட்டம் விதைத்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், வழக்கத்தை விட சுமார் 45 சதவீதம் கூடுதலாக மழை பெய்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு கணித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஓரிருஇடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக திண்டுக்க, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,”மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இன்றும், நாளையும் மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கட் கடலில் ஒரிசா மேற்குவங்க கடலோர பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 செலா மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் தெற்கு, மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் மத்தியமேற்கு அரபிக்கடலின் தென்மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்திய அரபிக்கடலின் மத்திய பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+