சடசடன்னு வெடிச்சு கொட்டப்போகுது கனமழை.. 16 மாவட்டங்களுக்கு அலர்ட்! சென்னை மக்களும் கவனமா இருங்க
சென்னை: தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பு, "தென் இந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
07.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
08.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை மாவட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
09.11.2023 மற்றும் 10.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 11.11.2023 மற்றும் 12.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): தென்காசி 12, ஆயிக்குடி (தென்காசி) 10, எழுமலை (மதுரை) 9, திருத்தணி (திருவள்ளூர்) 7, ராஜபாளையம் (விருதுநகர்), சிவகிரி (தென்காசி), காஞ்சிபுரம் தலா 6, மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 5, தேவகோட்டை (சிவகங்கை), அரக்கோணம் (ராணிப்பேட்டை), பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி) தலா 4, திருத்தணி (திருவள்ளூர்), பாளையம்கோட்டை (திருநெல்வேலி), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), உப்பாறு அணை (திருப்பூர்), வாலாஜா (ராணிப்பேட்டை), நிலக்கோட்டை (சென்னை), செங்கோட்டை (தென்காசி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), மலையூர் (புதுக்கோட்டை) தலா 3, சோலையார் (கோயம்புத்தூர்), மண்டலம் 02 மணலி (சென்னை), கன்னியாகுமரி, கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), வனமாதேவி (கடலூர்), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), பேராவூரணி (தஞ்சாவூர்), ஆண்டிபட்டி (மதுரை), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), கொடைக்கானல் (திண்டுக்கல்), கடனா அணை (தென்காசி), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), கொடவாசல் (திருவாரூர்), பூதலூர் (தஞ்சாவூர்), சோழவந்தான் (மதுரை), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), குன்னூர் (நீலகிரி), சிங்கம்புணரி (சிவகங்கை), சோத்துப்பாறை (தேனி), செம்பரம்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), உசிலம்பட்டி (மதுரை), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), பூந்தமல்லி (திருவள்ளூர்), தேவாலா (நீலகிரி), திருப்பத்தூர் (சிவகங்கை), பர்லியார் (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி) தலா 2, ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), வாடிப்பட்டி (மதுரை), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), இடையப்பட்டி (மதுரை), திருவையாறு (தஞ்சாவூர்), குண்டடம் (திருப்பூர்), போடிநாயக்கனூர் (தேனி), மேலாலத்தூர் (வேலூர்), மாரண்டஹள்ளி (தர்மபுரி), பண்ருட்டி (கடலூர்), குண்டாறு அணை (தென்காசி), புழல் ARG (திருவள்ளூர்), பயணியர் விடுதி சிவகங்கை, கருப்பாநதி அணை (தென்காசி), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), அழகரை எஸ்டேட் (நீலகிரி), ராமநதி அணைப் பகுதி (தென்காசி), பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்), மணலி (சென்னை), வீரபாண்டி (தேனி), கெத்தை (நீலகிரி), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்), புழல் (சென்னை), ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி), திருநெல்வேலி, கோடநாடு (நீலகிரி), ராதாபுரம் (திருநெல்வேலி), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), மேட்டூர் (சேலம்), மைலாடி (கன்னியாகுமரி), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), வெட்டிக்காடு (தஞ்சாவூர்), நாலுமுக்கு (திருநெல்வேலி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), கேத்தி (நீலகிரி), குளச்சல் (கன்னியாகுமரி), கன்னிமார் (கன்னியாகுமரி), திருப்புவனம் (சிவகங்கை), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), பெரியகுளம் (தேனி), பார்வூட் (நீலகிரி), தூத்துக்குடி, கிளானிலை (புதுக்கோட்டை), களக்காடு (திருநெல்வேலி), நீடாமங்கலம் (திருவாரூர்) தலா 1." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications