தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.. லிஸ்ட் போட்ட வானிலை மையம்! உஷார் மக்களே
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மே 5, 6ம் தேதி தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நாளை கத்திரி வெயில் தொடங்க இருக்கும் நிலையில், மழை குறித்து வானிலை ஆய்வு மையம் அப்டேட் கொடுத்திருப்பது சற்று ஆசுவாசத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அறிவிப்பின்படி மே 5ம் தேதியன்று நீலகிரி, கோவை, கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலும், மே 6ம் தேதியன்று ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் வானிலை அறிவிப்பில், "தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
குழித்துறை (கன்னியாகுமரி), வெம்பக்கோட்டை (விருதுநகர்), கோடநாடு (நீலகிரி) தலா 5,
கருப்பாநதி அணை (தென்காசி), ஒசூர் AWS (கிருஷ்ணகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) தலா 4, திருவாரூர் AWS (திருவாரூர்), கடனா அணை (தென்காசி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), தம்மம்பட்டி (சேலம்), மேலாலத்தூர் (வேலூர்), சங்கரன்கோயில் (தென்காசி), திருச்சுழி (விருதுநகர்), குன்னூர் (நீலகிரி), அழகரை எஸ்டேட் (நீலகிரி), பாலக்கோடு (தர்மபுரி), பாலகோடு ARG (தர்மபுரி) தலா 3.
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), உடுமலைப்பேட்டை (திருப்பூர்), திருவாரூர் (இருவாரூர்), குன்னூர் PTO (நீலகிரி), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), குன்னூர் AWS (நீலகிரி), PWD வாரப்பட்டி (கோயம்புத்தூர்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), புதுச்சத்திரம் (நாமக்கல்), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி). அருப்புக்கோட்டை (விருதுநகர்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), பர்லியார் (நீலகிரி), தர்மபுரி PTO (தர்மபுரி), போடிநாயக்கனூர் (தேனி), குடியாத்தம் (வேலூர்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), கூடலூர் பஜார் (நீலகிரி), ஒசூர் (கிருஷ்ணகிரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), மடத்துக்குளம் (திருப்பூர்), பி.என்.பாளையம் ARG (கோயம்புத்தூர்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்) தலா 2,
மேல் கூடலூர் (நீலகிரி), மஞ்சளாறு (தேனி), பார்வூட் (நீலகிரி), பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்), அணைகெடங்கு (கன்னியாகுமரி), ஆம்பூர் (திருப்பத்தூர்), புத்தன் அணை (கன்னியாகுமரி), கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), தக்கலை (கன்னியாகுமரி), சோலையார் (கோயம்புத்தூர்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), பவானி (ஈரோடு), சிவகாசி (விருதுநகர்), பெரியாறு (தேனி), அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்), திருப்பூர் PWD (திருப்பூர்), கேத்தி (நீலகிரி). பயணியர் விடுதி சிவகங்கை (சிவகங்கை), பாரூர் (கிருஷ்ணகிரி), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), கோத்தகிரி (நீலகிரி), மன்னார்குடி (திருவாரூர்), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), ராமநதி அணைப் பகுதி (தென்காசி), காக்காச்சி (திருநெல்வேலி), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), கரியகோவில் அணை (சேலம்), கிளன்மார்கன் (நீலகிரி), கோவிலங்குளம் (விருதுநகர்), கின்னக்கோரை (நீலகிரி), தளி (கிருஷ்ணகிரி), பாலமோர் (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), கோயம்புத்தூர் விமான நிலையம் (கோயம்புத்தூர்), பென்னாகரம் (தர்மபுரி), இளையாங்குடி (சிவகங்கை), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), ஆலங்காயம் (திருப்பத்தூர்), கழுகுமலை (தூத்துக்குடி), குமாரபாளையம் (நாமக்கல்), தென்காசி AWS (தென்காசி), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), மாஞ்சோலை (திருநெல்வேலி) 1 தலா 1.
வெப்பநிலை நிலவரம்:
அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்தவரை கரூர் பரமத்தி: 40.0° செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்) கரூர் பரமத்தியில் 21.7° செல்சியஸும் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 1-2 செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3* செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும் இயல்பை விட குறைவாகவும் இருந்தது.
வட தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35-40° செல்சியஸ், தென் தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37-38° செல்சியஸ், தென் தமிழக கடலோரப்பகுதிகளில் 34-35° செல்சியஸ், வட தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34-38' செல்சியஸ், மலைப்பகுதிகளில் 22-29° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. எனவே இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே.5ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
1. கோயம்புத்தூர்
2. திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள்
3. நீலகிரி
4. தேனி
5. தென்காசி
6. விருதுநகர்
7. மதுரை
8. திண்டுக்கல்
9. கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே.6 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
1. கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள்
2. நீலகிரி
3. ஈரோடு
4. தேனி
5. திண்டுக்கல்
6. தென்காசி
7. மயிலாடுதுறை
8. நாகபட்டினம்
9. தஞ்சாவூர்
10. திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே.7ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே.8ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே. 9ம் தேதி தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை, இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. மே.5 முதல் 7ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் சற்று 2-3° செல்சியஸ் குறையக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். மே.5 முதல் 7 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.
குறிப்பாக இன்று அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
இன்று (03-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (04-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகளில் இன்றும் நாளையும் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மே.5 முதல் 7 வரை எச்சரிக்கை ஏதுமில்லை.
வங்கக்கடல் பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 7ம் தேதி வரை எச்சரிக்கை ஏதுமில்லை" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications