இரவு யாரும் வெளியே வராதீங்க.. மொத்தம் 31 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்
சென்னை: இன்றிரவு 31 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் அவசியமில்லாமல் வெளியில் சுற்றுவதை தவிர்க்கவும்.
கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் கோடை மழை தீவிரமெடுத்திருக்கிறது. குறிப்பாக நேற்று ஏறத்தாழ அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்திருக்கிறது. இந்நிலையில் வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கையின்படி,

- ராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- கடலூர்
- பெரம்பலூர்
- அரியலூர்
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- புதுக்கோட்டை
- திருச்சிராப்பள்ளி
- திருப்பத்தூர்
- வேலூர்
- கிருஷ்ணகிரி
- தர்மபுரி
- சேலம்
உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இரவு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல
- ஈரோடு
- நாமக்கல்
- கரூர்
- திண்டுக்கல்
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- சிவகங்கை
- மதுரை
- தென்காசி
- திருநெல்வேலி
- ராமநாதபுரம்
- நீலகிரி
- கோவை
உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இரவு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 7 நாட்களுக்கான எச்சரிக்கையை வெளியிட்டிருந்தது. அதன்படி,
நாளை (மே.19ம் தேதி) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே.20ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கரூர், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மே.21 முதல் 24 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications