5 நாள் மஞ்சள் அலர்ட்.. 3 நாள் வெப்பஅலை.. தமிழகத்தை வச்சி செய்யப்போகும் சூரியன்.. வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு கடும் வெயிலுக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதில் மே 2, 3, 4 ஆகிய தினங்களில் வெப்பஅலை கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் வழக்கத்துக்கு மாறாக வெப்பஅலையின் தாக்கம் என்பது அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் எனக்கூறி வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பான விபரம் வருமாறு:
இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகமத்தில் அதிகபட்ச வெப்பநிலை என்பது தமிழக உள்மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் ஒரு சில இடங்களில் 49 டிகிரி செல்சியஸ் முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். பிற தமிழக மாவட்டம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 37 டிகிரி செல்சியஸ் முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும்.
மேலும் மே மாதம் 2, 3, 4 ஆகிய தேதிகளில் பல இடங்களில் வெப்பஅலை கடுமையாக வீசும். இதனால் 5 நாட்களுக்கு கடும் வெயிலுக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெயில் வாட்டி வதைத்து வரும் சூழலில் இந்த மஞ்சள் அலர்ட் மக்களை இன்னும் வருத்தப்பட வைத்துள்ளது. இந்த மஞ்சள் அலர்ட்டை தொடர்ந்து தான் அடுத்த மாதம் கத்திரி வெயில் காலம் தொடங்குகிறது. இது இன்னும் பீதியை ஏற்படுத்துகிறது.
மேலும் அடுத்த 24 மணிநேரத்தை பொறுத்தவரை சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை என்பது 37 டிகிரி செல்சியஸ் முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 28-29 டிகிரி செல்சியஸையொட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications