முதல்முறை பெருமழை! மிக மிக பலத்த மழையை கணிக்க முடியாதது ஏன்? வானிலை மையம் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினத்தில் 95 செ.மீ. மழை பெய்யும் என கணிக்க முடியாதது ஏன் என்பது குறித்து தென் மண்டல வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளது. தென் மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு முதலே மழை பெய்து வருகிறது. இதனால் தென் தமிழகமான குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

Chennai meteorological department says why 90 cm rainfall was not predicted?

பல இடங்களில் நீர்த் தேக்கங்கள், கன்மாய்கள், கால்வாய்கள் உடைந்து ஊருக்குள் வெள்ள நீர் புகுந்துவிட்டது. பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இந்த நிலையில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது போல் விருதுநகர், மதுரை மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து தென் மண்டல இயக்குநர் பாலசந்திரன் கூறியிருப்பதாவது: இன்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கை நீடிக்கிறது.

நாளையும் அந்த பகுதிகளில் மழை பெய்யும். மேலும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியானது 4 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் மழை நீடிக்கும். இந்த பெரு மழை மேக வெடிப்பால் ஏற்பட்டது என கூறிவிட முடியாது. மேலடுக்கு சுழற்சியால் பெய்த மழை இது. மேலடுக்கு சுழற்சியின் போது இத்தகைய பெருமழை இதுதான் முதல்முறை.

இதுவரை எங்குமே கண்டதில்லை. 1931 ஆம் ஆண்டுக்கு பிறகு பாளையங்கோட்டை பகுதியில் அதிக மழை பதிவாகியுள்ளது. அதீத மழை என்றால் 20 செ.மீ.க்கு மேல் பெய்யும் என்றீர்கள். ஆனால் காயல்பட்டினத்தில் 92 செ.மீ. மழை பெய்துள்ளதே இதை ஏன் முன்கூட்டியே எச்சரிக்கைவில்லை என கேட்கிறீர்கள். மழையை பொருத்தவரை கனமழை, மிக கனமழை, அதீத மழை என்று மட்டுமே விவரிக்க முடியும்.

கனமழை என்றால் 7 முதல் 11 செ.மீ. மிக கனமழை என்றால் 12 முதல் 20 செ.மீ. அதிக கனமழை என்றால் 21 செ.மீ. க்கு மேல் என 3 பிரிவுகளாக கணிக்கப்படுகிறது. நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு நேற்று காலை முதல் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 90 செ.மீ மழை பெய்யும் என மழையின் அளவை குறிப்பிட்டு கணிக்க முடியாது. வடகிழக்கு பருவமழை வருங்காலத்தில் அதிகமாகவே இருக்கும் என தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+