இன்று இரவு 10 மணிக்குள் சம்பவம் இருக்கு.. சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம்
சென்னை: இன்று இரவு 10 மணிக்குள் தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றய தினம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. சென்னையில் இன்று காலை ஒரு சில பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இந்நிலையில் இன்று இரவும் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த நவம்பர் மாத இறுதியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழக வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து கடந்த 2 வாரங்களுக்கு முன் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிபடியாக வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது. இதன் காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.
வட தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்தது. இந்நிலையில் வங்கக்கடலில் கடந்த வார தொடக்கத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவானது இது படிப்படியாக வலுப்பெற்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
வானிலை எச்சரிக்கை
இந்த தாழ்வு மண்டலம் கிழக்கு-வடகிழக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, அதன் பிறகு, கடலில் படிப்படியாக வலுவிழக்கும் என கூறப்பட்டது. அதேபோல ஞாயிற்றுகிழமை அன்று தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. இது ஆந்திர கடலோர பகுதிகளில் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் மேற்கு தென்மேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வடதமிழ்நாடு கரையோரம் திங்கட்கிழமை நிலை கொண்டது.
டிசம்பர் 30 வரை மழை இருக்கு
இது தொடர்ந்து மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், தெற்கு ஆந்திர வடதமிழக கடலோரப்பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. இது, மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்றைய தினம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் வலுவிழக்கக்கூடும். மேலும் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் டிசம்பர் 30 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications