Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெளுக்கப்போகுதே மழை.. செப்டம்பர்ல தமிழ்நாட்டில் மழை சீசன் தொடங்குதா? 14 மாவட்டங்களில் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "வட தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சிகள் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Chennai Meterological department gave heavy rain alert in 14 districts

கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள், தென்காசி, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 04.09.2023 முதல் 08.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): நாலுமுக்கு (திருநெல்வேலி) 16, வைகை அணை (தேனி), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 15, நிலக்கோட்டை (திண்டுக்கல்) 11, ஆண்டிபட்டி (தேனி) 10, மாஞ்சோலை (திருநெல்வேலி), மஞ்சளாறு (தேனி) தலா 9, பெரியகுளம் (தேனி), பாலமோர் (கன்னியாகுமரி) தலா 8, பென்னாகரம் (தர்மபுரி), கொடுமுடி (ஈரோடு), ஒகேனக்கல் (தர்மபுரி) தலா 7, ராமநாதபுரம், ஊத்து (திருநெல்வேலி), சோத்துப்பாறை (தேனி), மேட்டூர் (சேலம்), ஓட்டன்சத்திரம் (திண்டுக்கல்) 6, பெரியகுளம் AWS (தேனி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), பாபநாசம் (திருநெல்வேலி), பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), கரூர்பரமத்தி (கரூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), ஊத்துக்குளி (திருப்பூர்), கொடைக்கானல் படகு குழாம் ( திண்டுக்கல்) தலா 5, ஆத்தூர் (சேலம்), துறையூர் (திருச்சி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), பெலாந்துறை (கடலூர்), கங்கவல்லி (சேலம்), பெரியார் (தேனி), கொடைக்கானல் (திண்டுக்கல்), தலைவாசல் (சேலம்), எடப்பாடி (சேலம்), பாலவிதிதி (கரூர்) தலா 4, சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), வேப்பூர் (கடலூர்), கரூர், வால்பாறை PAP (கோயம்புத்தூர்), திண்டுக்கல், மணிமுத்தாறு (திருநெல்வேலி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), மோகனூர் (நாமக்கல்), பெரம்பலூர், கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), கோவில்பட்டி (தூத்துக்குடி), பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி), பாப்பாரப்பட்டி Kvk Aws (தர்மபுரி), சேத்தியாத்தோப்பு (கடலூர்), கிளாசெருவை (கடலூர்), குண்டடம் (திருப்பூர்), சிவகிரி (தென்காசி), மூலனூர் (திருப்பூர்), அம்மாபேட்டை (ஈரோடு), சென்னிமலை (ஈரோடு), தேவாலா (நீலகிரி), பெருந்துறை (ஈரோடு), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), தர்மபுரி PTO (தர்மபுரி) தலா 3, அரண்மனைப்புதூர் (தேனி), மீ மாத்தூர் (கடலூர்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), லக்கூர் (கடலூர்), சங்கரன்கோவில் (தென்காசி), சேர்வலர் அணை (திருநெல்வேலி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), ஆண்டிபட்டி (மதுரை), தர்மபுரி, புகையிலை நிலையம் (திண்டுக்கல்), வேடசந்தூர் (திண்டுக்கல்), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), கிருஷ்ணகிரி, சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), போடிநாயக்கனூர் (தேனி), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), ராயக்கோட்டை, (கிருஷ்ணகிரி), கோவில்பட்டி AWS (தூத்துக்குடி), கோலாச்சல் (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 2, ஆலங்காயம் (திருப்பத்தூர்), கன்னட அணைக்கட்டு (திருநெல்வேலி), கோமுகி அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), தாத்தையங்கார்பேட்டை (திருச்சி), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), களக்காடு (திருநெல்வேலி), தேக்கடி (தேனி), சேந்தமங்கலம் (நாமக்கல்), புத்தன் அணை (கன்னியாகுமரி), பாலக்கோடு (தர்மபுரி), உசிலம்பட்டி (மதுரை), விருதாச்சலம் (கடலூர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), ஹரூர் (தர்மபுரி), வீரபாண்டி (தேனி), சித்தார் (கன்னியாகுமரி), குண்டாறு அணை (தென்காசி), வட்டமலை நீர்த்தேக்கம் (திருப்பூர்), காட்டுமயிலூர் (கடலூர்), க்ளென்மோர்கன் (நீலகிரி), மாரண்டஹள்ளி (தர்மபுரி), ஏத்தாப்பூர் (சேலம்), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), விழுப்புரம், திருத்தணி (திருவள்ளூர்), சங்கரிதுர்க்கம் (சேலம்), திருப்பூர் பொதுப்பணித்துறை, தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), வாடிப்பட்டி (மதுரை), தம்மம்பட்டி (சேலம்), சேலம், திருப்பத்தூர், அவினாசி (திருப்பூர்), அரவக்குறிச்சி (கரூர்), முசிறி (திருச்சி), பரூர் (கிருஷ்ணகிரி) தலா 1

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில் 02.09.2023 முதல் 06.09.2023 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகளில் 02.09.2023 மற்றும் 03.09.2023: தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 04.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

05.09.2023: தெற்கு கேரளா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 05.09.2023 மற்றும் 06.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்." என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+