Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்படியே சென்னை பக்கம் திரும்பும் மழை.. நெல்லை, குமரி உள்பட இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி உள்பட 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஓரிரு இடங்களில் தரைக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. நேற்று தென்காசி மாவட்டத்தில் காலையில் பெய்யத் தொடங்கிய மழை தொடர்ந்து விட்டு விட்டு நள்ளிரவு வரை தொடர்ந்தது. கடையம், ஆலங்குளம், பாப்பான்குளம், சம்பன்குளம், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, பாவூர் சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்தது.

Rain Chennai Southwest Monsoon

6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

நெல்லை மாவட்டத்திலும் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. கோவை மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கன முதல் மிக கனமழை பெய்தது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 19 செமீ மழை பதிவானது. மேல் பவானி 13 செமீ, சின்னக் கல்லாரில் 12 செமீ மழையும் பெய்துள்ளது. இந்த நிலையில் இன்று மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக சென்னையில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், நீலகிரி மற்றும் கோவை உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்படுவதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறியிருப்பதாவது:- இன்று கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மே 31 முதல் ஜூன் 4ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் இன்று எப்படி?

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்க வாய்ப்பு உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இன்றும் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மே 31 முதல் ஜூன் 2 வரை தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும்.

இன்று வடக்கு-மத்திய வங்கக்கடலின் அநேக பகுதிகள், தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், ஆந்திர கடலோரப்பகுதிகள், இதர வடக்கு, தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில், சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+