சென்னையில் மழை.. அடுத்த 3 மணி நேரத்தில் கொட்ட போகுது மழை.. எங்கேன்னு பாருங்க.. வந்தாச்சு அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் இன்றைய தினம் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக, வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு 11 மாவட்டங்களில் கனத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மட்டுமல்லாமல், தென்மாவட்டங்களிலும் மழை பெய்து கொண்டேயிருக்கிறது.

கனமழை: அந்தவகையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 14 மாவட்டங்களில் குறிப்பாக, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ஆகிய 14 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, சென்னையில் 2 நாட்களும், நகரின் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நண்பகல் மழை: இந்த பகுதிகளில் எல்லாம், இன்று நண்பகல் வரை கனமழை பெய்யக்கூடும் என்றும், மற்ற பெரும்பாலான இடங்களில், மிதமான மழைக்கே வாய்ப்பு உள்ளதாக நேற்றைய தினமே ஆய்வு மையம் கூறியிருந்தது.

ஆனால், தற்போது மேலும் ஒரு அறிவிப்பினை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக செய்யூர் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.
3 மணி நேரம்: மேலும், தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட மாவட்ட மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications