Chennai Rain: சென்னையில் சம்பவம் செய்யும் மழை.. அடுத்த 3 மணி நேரத்துக்கு விடாது.. 11 மாவட்டங்களில் வெளுக்க போகுது
சென்னை: சென்னையில் (Chennai Rain) கடந்த 3 நாட்களாக மாலை நேரத்திற்கு பிறகு மழை பெய்து வருகிறது. இரவில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் இன்றைக்கும் சென்னையில் மழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப் போக இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்றும் தலைநகர் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. பகல் நேரங்களில் வெயிலும் மாலை நேரத்திற்கு பிறகு மழையும் கொட்டி வருகிறது. சென்னை, நீலகிரி, கோவை, தென்காசி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது.

சென்னை உள்பட 11 மாவட்டங்கள்
இந்த நிலையில் பகல் நேரத்தில் பல்வேறு இடங்களில் வெயில் அடித்தது. இந்த நிலையில் தான் இன்றைக்கும் இரவு நேரங்களில் சென்னையில் மழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை மட்டுமல்லாமல், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, கரூர், மதுரை என தமிழகம் முழுக்க 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 7 மணி வரை கரூர், திருச்சி, கோவை, நீலகிரி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோன்று அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
-
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications