வெள்ளத்தில் மிதந்த சேலையூர் சாலை.. ஆன்ஸ்பாட்டுக்கு வந்த தாம்பரம் மேயர் வசந்தகுமாரி.. விறுவிறு
சென்னை: சென்னையின் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் தாம்பரம் சேலையூரில் சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனிடையே மழை பெய்யத் தொடங்கியதும் உடனடியாக களத்துக்கு வந்து தாம்பரம் மேயர் வசந்தகுமாரி பணிகளை விரைவுபடுத்தினார்.
அதென்னமோ தெரியவில்லை.. வடகிழக்கு பருவ மழையோ, தென்மேற்கு பருவ மழையோ. வங்க கடலில் இருந்து நேராக வானத்துக்கு போகும் மேகக்கூட்டங்கள் அப்படியே நேராக தென் சென்னை பக்கம் தான் பொதுவாக இறங்கி அடிக்கிறது. சென்னையை தாக்கும் ஒவ்வொரு பேய் மழையும், முதலில் தென் சென்னை பகுதியைத்தான் தாக்குகிறது.

குறிப்பாக சொல்வது என்றால், தாம்பரம், மேடவாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை, ஓஎம்ஆர் சாலைகள், சோழிங்க நல்லூர், பெருங்குடி, மடிப்பாக்கம், சேலையூர், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. மழை வெளுத்து வாங்கும் போதெல்லாம் இந்த பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை நீர் வடிகால்கள் குறைவு மற்றும் பள்ளமான பகுதிகள் என்பால் இந்த பகுதிகள் அதிக அளவு மழை பெய்யும் போதெல்லாம் பாதிக்கப்படுகின்றன.
அந்த வகையில் தென் சென்னை மற்றும் தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இன்று இரவு கனமழை பெய்தது. மழை காரணமாக பல்வேறு சாலைகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் சில இடங்களில் மழை நீர் உடனே வெளியேற வழி இல்லாததால் வெள்ளக்கடாக மாறியது.
Tambaram Selaiyur after the rains !!! pic.twitter.com/EwQ9OafRGG
— Tamil Nadu Weatherman (@praddy06) September 23, 2023
தாம்பரம் சேலையூர் பகுதியில் சாலைகளில் மழைநீர் வடிய வேண்டிய வழிகள் மூடிக்கிடந்த காரணத்தால் வெள்ளம் பெரிய அளவில் தேங்கியது. பைக்குகளை பாதிக்கும் மேல் தண்ணீரில் மூழ்கின.வாகன ஓட்டிகள் வாகனத்தை ஓட்ட முடியாமல் அவதிப்பட்டன. ஒருபக்கம் கனமழை என்றால் மறுபக்கம் தண்ணீர் தேங்கி நின்றதால் நீண்ட நேரம் வாகனங்கள் சாலைகளில் தடுமாறியபடி மிக மெதுவாக ஊர்ந்து சென்றன.
இதனிடையே மழை பெய்யத் தொடங்கியதும் உடனடியாக களத்துக்கு வந்தார் தாம்பரம் மேயர் வசந்தகுமாரி. மழையால் சுரங்கப் பாதைகளில் நீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார். கொட்டும் மழையில் மேயர் வசந்தகுமாரி குடைகளை பிடித்தபடி மாநகராட்சி பணியாளர்களிடம் மழை நீர் தேங்காமல் இருக்குமாறு வழிகளை உருவாக்க அறிவுறுத்தினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications