சென்னையில் கொளுத்திய வெப்பம்.. இந்த ஆண்டின் சூடான நாள் இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று அதிக அளவில் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டில் இன்றுதான் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.

சென்னை மட்டுமல்லாது வேலூர் மற்றும் திருத்தணியிலும் வெயில் அதிக அளவில் பதிவாகியுள்ளது என்றும் வெதர்மேன் கூறியிருக்கிறார்.

Chennai Tamil Nadu rain

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வானிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் பருவமழை முடிவுக்கு வந்த நிலையில், பனி நீடித்தது. பின்னர் பிப்ரவரி மாதம் இறுதியில் வெயில் தொடங்கியது. அப்போது தொடங்கி ஏப்ரல் தொடக்கம் வரை வெயில் வாட்டி வதைத்தது. இருப்பினும் திடீரென கடந்த 1 வாரமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்ய தொடங்கியள்ளது.

குறிப்பாக கொங்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் வெயில் குறைந்து மழை பெய்ய தொடங்கியது. இன்றைய தேதியில் மழை தீவிரமடைந்திருக்கிறது. இருந்தாலும் வெயிலும் தன் பங்குக்கு ஒரு காட்டு காட்டி வருகிறது.

அதாவது வேலூர் மாவட்டத்தில் 40.1 டிகிரி செல்சியஸும் (104.18F), திருத்தணியில் 40 டிகிரியும்(104 F), சென்னை மீனம்பாக்கத்தில் 39.7 டிகிரியும் (103.36 F), நுங்கம்பாக்கத்தில் 39.2 டிகிரியும் (102.56 F) வெயில் கொளுத்தியுள்ளது. சென்னையில் இந்த ஆண்டு பதிவான அதிகபட்ச வெயிலின் அளவு இதுவாகும். இதனை தமிழ்நாடு வெதர்மேன் உறுதி செய்திருக்கிறார்.

காலை முதல் சென்னை வாகன ஓட்டிகள் வெயிலின் தீவிரத்தை உணர்ந்திருந்தனர். உடல் முழுவதும் வியர்வையால் குளித்திருக்கின்றனர். சுமை தூக்கும் தொழிலாளர்கள், ராபிடோ, ஸ்விகி போன்ற தொழிலாளர்களும் கடுமையான வெப்பத்தை உணர்ந்திருக்கின்றனர். வெப்பம் நாளுக்கு நாள் அதிகமாகும் என்பதால், இனி வரும் நாட்களும் கொடுமையா இருக்குமோ என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.

வெப்பத்தின் தாக்கத்திலிருந்து விடுபட, வெயில் நேரங்களில் வெளியில் செல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் அட்வைஸ் செய்திருக்கிறார்கள். குறிப்பாக பகல் 11 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், அப்படி போக நேர்ந்தால் வெளிர் நிற ஆடைகளை அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மட்டுமல்லாது அடிக்கடி தண்ணீருடன் சேர்த்து நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+