சென்னையில் விடிய விடிய கொட்டிய கனமழை- சோழிங்க நல்லூரில் ஒரே இரவில் 9 செ.மீ மழை பதிவு!
சென்னை: சென்னை மாநகரின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை மாநகரின் பல பகுதிகளில் 2 செ.மீ முதல் 9 செ.மீ. வரை மழை பதிவாகி உள்ளது. சென்னை புறநகர் பகுதியான சோழிங்கநல்லூரில் நேற்று இரவு 8.30 மணி முதல் இன்று அதிகாலை 3 மணி வரை ஒரே இரவில் 9 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.
தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதேபோல காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சென்னையில் நேற்று இரவு 8.30 மணி முதல் கனமழை கொட்டத் தொடங்கியது. சென்னை மாநகரின் அடையாறு, மயிலாப்பூர், மந்தைவெளி, திருவல்லிக்கேணி, எழும்பூர், சேத்துப்பட்டு, கிண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய கனமழை வெளுத்தெடுத்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ள நீர் பாய்ந்தோடுகிறது.
சென்னை மாநகரில் பொதுவாக 2 செமீ முதல் 9 செமீ மழை பதிவானது. சென்னை புறநகர் பகுதியான சோழிங்கநல்லூரில் மட்டும் நேற்று இரவு 8.30 மணி முதல் அதிகாலை 3 மணி வரையில் மொத்தம் 9 செ.மீ. மழை பெய்திருக்கிறது. அதாவது ஒரே இரவில் 9 செமீ மழை பெய்ததால் சோழிங்கநல்லூர் பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சென்னையில் இன்றும் நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சென்னை மாநகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வெப்பநிலையும் 98 டிகிரி பாரன்ஹீட் இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
கோவை டூ குமரி வரை.. இன்று 10 மாவட்டங்களில் விட்டு விளாச போகுது கனமழை.. சென்னைக்கும் அலர்ட் -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம்












Click it and Unblock the Notifications