சென்னையில் உச்சம் தொடும் வெயில்.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வெயில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்றும் நாளையும் 32-33 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

அதாவது, "இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

weather tamil nadu

பிப்.13 முதல் 17 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை" என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த அளவில் ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 34.6 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது.

அதேபோல ஈரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 2.1° செல்சியஸ் முதல் 4.0 ° செல்சியஸ் வரை வெயில் அதிகரித்துள்ளது. மறுபுறம் நீலகிரி, நாகபட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் -2.1° செல்சியஸ் முதல் 4.0° செல்சியஸ் வரை வெயில் குறைந்திருக்கிறது. மற்ற மாவட்டங்களில் வெயில் இயல்பான அளவில் பதிவாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+