சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்
சென்னை: சென்னை உட்பட வட மாவட்டங்களில் காலை நேரங்களில் வெயில் கொளுத்துவதும், மாலை நேரங்களில் மழை பொளப்பதும் இயல்பாக மாறி வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு லேசான மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரியில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை கொட்டும்.

நேற்றும் இப்படித்தான் இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையை பொறுத்த அளவில், "ராசிபுரம் (நாமக்கல்), கல்லந்திரி (மதுரை), மண்டலம் 05 பாரி முனை (சென்னை), மண்டலம் 07 அயப்பாக்கம் (சென்னை) தலா 3 செ.மீ,
மண்டலம் 06 கொளத்தூர் (சென்னை), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), திருவாடானை (ராமநாதபுரம்), CD மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை), பெரம்பூர் (சென்னை), தொண்டி (ராமநாதபுரம்), மண்டலம் 03 காசிமேடு (சென்னை), மண்டலம் 03 மாதவரம் (சென்னை), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), மண்டலம் 18 அமைந்தக்கரை (சென்னை), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), சின்கோனா (கோயம்புத்தூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), சோலையார் (கோயம்புத்தூர்), உபாசி TRF AWS (கோயம்புத்தூர்), அம்பத்தூர் (Rev) (திருவள்ளூர்) தலா 2 செ.மீ,
மண்டலம் 03 புழல் (சென்னை), மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), மண்டலம் 05 சென்னை சென்ட்ரல் (சென்னை), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), நெய்யூர் AWS (கன்னியாகுமரி), மண்டலம் 04 தண்டையார்பேட்டை (சென்னை), புழல் ARG (திருவள்ளூர்), சென்னை (N) AWS (சென்னை), பூந்தமல்லி (திருவள்ளூர்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை), நாலுமுக்கு (திருநெல்வேலி), மானாமதுரை (சிவகங்கை), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி) தலா 1 செ.மீ என மழை பதிவாகியிருக்கிறது.
அடுத்த ஒரு வாரத்தை பொறுத்த அளவில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன்.7 முதல் 9 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன்.10ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன்.11ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்த அளவில், இன்று (05-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (06-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications