வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது! பெரிய சம்பவம் இருக்கு.. வானிலை மையம் வார்னிங்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்றும், இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை பட்டையை கிளப்பி வருகிறது. இப்படி இருக்கையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதாக வெளியாகியிருக்கும் தகவல், மழைப்பொழிவை தீவிரமாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில், "இன்று தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications
