அந்த சத்தம்.. சென்னையை பயமுறுத்தும் இடி மின்னல்! இப்படியே போனா செஞ்சுரி.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்
சென்னை: சென்னையில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையின் பல இடங்களில் 50 மில்லி மீட்டர் மழை பெய்து வரும் நிலையில், இன்னும் சில நேரங்களில் 100 மில்லி மீட்டர் மழையை எட்டி செஞ்சுரி அடிக்கும் எனவும், சென்னையில் இடி மின்னல் பயமுறுத்தும் வகையில் இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் உள்ளார்.
தமிழகத்தில் இன்று சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழையும் நாளை அதிக கன மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளான மேடவாக்கம், பள்ளிக்கரணை, குரோம்பேட்டை ,வேளச்சேரி, நெற்குன்றம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இதே போல சென்னையின் அண்ணா சாலை, தி நகர், சைதாப்பேட்டை, கிண்டி, திருவல்லிக்கேணி, அசோக் நகர், ஜாஃபர்கான் பேட்டை, சேப்பாக்கம், ராயப்பேட்டை, எழும்பூர், மடிப்பாக்கம், அடையார், உள்ளிட்ட பகுதிகளில்பலக்க காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பலத்த காற்றுடன் பெய்து வரும் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. அதே நேரத்தில் மழை நீரை வெளியேற்றுவதற்காக சென்னை மாநகராட்சி ஊழியர்களும் தயார் நிலையில் இருக்கின்றனர்.
#sholinganallur #ChennaiRains pic.twitter.com/9OpkthuSPq
— Pattabi Raman (@pattabiraman_kl) October 14, 2024
மேலும் பலத்த காற்று காரணமாக ஆங்காங்கே மரங்கள் முறிந்து விட வாய்ப்புள்ளதால் அவற்றை உடனடியாக வெட்டி அகற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கண்ணைப் பறிக்கும் மின்னல் விழ தொடங்கியுள்ளது. இதனால் பலத்த இடி சத்தமும் கேட்டு வருவதால் மக்கள் வெளியே வரவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் இந்த நிலையில் சென்னையின் பல இடங்களில் 50 மில்லி மீட்டர் மழை பெய்து வரும் நிலையில், இன்னும் சில நேரங்களில் 100 மில்லி மீட்டர் மழையை எட்டி செஞ்சுரி அடிக்கும் எனவும், சென்னையில் இடி மின்னல் பயமுறுத்தும் வகையில் இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,” பைத்தியக்கார புயல், கொஞ்ச நேரத்துல சென்னையில் பல இடங்கள்ல 50 மி.மீ மழை பெய்துள்ளது.
இந்தா ரேட்ல போனா வேகமான செஞ்சுரி வந்துடும் போல. இடி மற்றும் மின்னல் சென்னையில் பயங்கரமாக உள்ளது. புயல் தெற்கு திசையில் இருந்து வடக்கு நோக்கி நகர்கிறது. வடகிழக்கு பருவ மழையில் சிவப்பு தக்கலிகள் அரிதானவை, இந்த இடி மின்னல் சத்தத்தை கேட்க இன்னும் 7 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.” என கூறியுள்ளார். முன்னதாக சென்னையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை பெய்யுமென தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications