ஆபீஸ் போகும் மக்களே உஷார்.. சென்னை உட்பட 9 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை! வானிலை மையம் வார்னிங்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் கடந்த சில நாட்களாக அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் இன்று காலை 10 மணி வரை சென்னை உட்பட 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். அதேபோல் செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.













Click it and Unblock the Notifications