வாங்க டீ சாப்பிடலாம்! நீங்க சாப்பிடலையாம்மா? தூய்மை பணியாளர்களிடம் பாசம் காட்டிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: சென்னையில் கொட்டி வரும் மழையின் தீவிரத்தை ஆய்வு செய்ய முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அது போல் அவசரகால செயல்பட்டு மையத்திலும் ஆய்வு செய்தார்.
மழையிலும் பணியாற்றிய தூய்மை பணியாளர்களை பார்த்த முதல்வர் ஸ்டாலின் அவர்களை தேநீர் கடைக்கு அழைத்துச் சென்று தேநீர் வாங்கி கொடுத்து அவர்களிடம் நலம் விசாரித்து, பாதுகாப்பாக பணியாற்றுமாறு அறிவுறுத்தினார்.

தென் கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய தினம் முதலே கனமழை பெய்து வருகிறது.
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மட்டுமில்லாமல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் அடிஅடியென அடித்து துவைக்கும் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி போட்டது. சென்னையின் பெரம்பூர், புரசைவாக்கம், புளியந்தோப்பு, மாதவரம், முடிச்சூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் வந்துவிட்டது.
இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளும் இருக்க முடியாத சூழல் எழுந்துள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒரே நாளில் 15 செ.மீ.ருக்கு மேல் மழை பெய்துள்ளது. நாளையும் இந்த மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
பலர் வீடுகளை பூட்டிக் கொண்டு உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தஞ்சமடைகிறார்கள். வீடுகளில் விலை உயர்ந்த பொருட்களை உயரமான இடத்தில் வைக்கிறார்கள். அது போல் பிரட், பிஸ்கெட், உலர்ந்த உணவு பொருட்களை வாங்கி வைக்கிறார்கள். அது போல் கார்களை மேம்பாலங்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் மீட்பு நடவடிக்கைகள், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
அவர் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தார். மேலும் தனது சொந்த தொகுதியிலும் அவர் ஆய்வு செய்திருந்தார். அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அது போல் ஒரு பகுதியில் விடாத மழையிலும் தூய்மை பணி மேற்கொண்டிருந்த தூய்மை பணியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் அவர்களை தேநீர் கடைக்கு அழைத்துச் சென்று தேநீர் வாங்கிக் கொடுத்தார்.
அவர்களுடன் சிரித்து பேசி நலம் விசாரித்தார். மேலும் பாதுகாப்புடன் பணியாற்றுமாறு அறிவுறுத்தினார். மேலும் டீ நன்றாக இருக்கிறதா என கேட்டார். உடல்நலனை பார்த்துக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தினார். அவர்கள் அனைவரும் 77 மண்டலத்தை சேர்ந்தவர்கள் என தெரிவித்தனர். உடன் அமைச்சர் சேகர்பாபுவும் இருந்தார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications