School Leave: பள்ளிகளுக்கு அடுத்த 2 நாள் விடுமுறையா? துணை முதல்வர் உதயநிதி கொடுத்த அப்டேட்!
சென்னை: நாளை (அக்டோபர் 16) மற்றும் நாளை மறுநாள் (அக்டோபர் 17) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்பது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து ஆலோசித்து முடிவெடுத்து இன்று மாலைக்குள் அறிவிப்பார் என்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையின் பல்வேறு பகுதிளில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மேலும், நாளை, நாளை மறுநாளும் சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை அக்டோபர் 16 ஆம் தேதி டெல்டா மாவட்டங்களிலும், 17 ஆம் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூரில் அதிகனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கடலூர், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். கோவையில் பள்ளிகள் இன்று அரை நாள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (அக்டோபர் 16) மற்றும் நாளை மறுநாள் (அக்டோபர் 17) ஆகிய நாட்களிலும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல நேற்று மாலையில் இருந்து சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை தொடர்ச்சியாகப் பெய்து வருகிறது.
இதன் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாளும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் அரசு தரப்பில் இதுகுறித்து அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் இன்று ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், "அனைத்து ஐ.டி நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் அனுமதிக்க வேண்டும் என நேற்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
நாளையும் நாளை மறுநாளும் தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் மழை எச்சரிக்கை குறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார். இன்று மாலைக்குள் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications