கோவை டூ விருதுநகர் வரை.. இன்று 6 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. வானிலை அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று மட்டும் கோவை, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் நாளை கோவை, நீலகிரியில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

சென்னையில் வெயில் விட்டு விளாசி வரும் சூழலில், மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Coimbatore to Virudhunagar Heavy rain to lash 6 districts today - Weather update

கனமழை பெய்யும்

வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- இன்று 17.09.2026: கோவை, திண்டுக்கல், நீலகிரி, தேனி, மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலான பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை 18 ஆம் தேதி நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, சேலம், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் நீலகிரி, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் எப்படி?

20, 21 ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். 22, 23 ஆம் தேதிகளில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், இன்று நகரின் ஒருசில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு வேளைகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27°C ஆகவும் இருக்க வாய்ப்புள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+