சென்னையை தாக்கப்போகும் குளிர் அலை.. தேதி குறிச்சாச்சு! தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அலர்ட்!
சென்னை: நாடு முழுவதும் குளிர் காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டிலும் குளிரின் தாக்கம் கடுமையாக உள்ளது. இந்நிலையில் சென்னையில் அடுத்து வரும் சில நாட்களுக்கு குளிரின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக தனது x பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, "ஊட்டி தென்னிந்தியாவின் மிகக் குளிர்ந்த மலைப் பிரதேசமாகத் தொடர்கிறது. எதிர்வரும் இரண்டு நாட்களில் (டிசம்பர் 16 மற்றும் 17), மேகமூட்டம் மற்றும் மழையின் காரணமாக இரவு நேர வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக, மேகங்கள் பூமியில் இருந்து வெளியேறும் வெப்பத்தை தடுத்து நிறுத்துவதால், இரவும் காலையும் சற்று வெதுவெதுப்பாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும்.

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியே செல்லும்போது குடைகளைக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
டிசம்பர் 19 முதல் 21 வரையிலான நாட்களில் சென்னை மிகக் கடுமையான குளிரை சந்திக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையை விட உள் மாவட்டங்களில் குளிர் இன்னும் அதிகமாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நவம்பர் மாதத்தில் 20 நாட்களுக்கும், டிசம்பர் மாதத்தின் கடைசி 10 நாட்களிலும் வறண்ட வானிலை நிலவியது. வரும் நாட்களில் மழை எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை. மாத இறுதி வரை வறண்ட வானிலையே தொடரும். வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வரும் நிலையில், டிசம்பர் 31, 2025 வரை மேலும் 10-20 மி.மீ மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த மழையால், சென்னைக்கு நீர் வழங்கும் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன" என தெரிவித்திருக்கிறார்.
மேலும், டிசம்பர் 15, 2025 அன்று, 11 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாகப் பதிவான மலைப் பிரதேசங்களின் வெப்பநிலை விவரங்களையும் கொடுத்திருக்கிறார்.
ஊட்டி - 5.4C
கொடைக்கானல் - 6.4C
இடுக்கி (வட்டவாடா), கேரளா - 7.5C
ஹாசன், கர்நாடகா - 8.0C
குன்னூர் - 8.2C
வால்பாறை - 8.4C
ஏற்காடு - 8.8C
சிக்மகளூர் (கர்நாடகா) - 9.1C
குடகு (கர்நாடகா) - 9.4C
அரக்கு (ஆந்திரா) - 10.7C
வயநாடு (கபனிகிரி), கேரளா - 10.8C
ஆகும்பே, கர்நாடகா - 11.1C
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 17 டிகிரி செல்சியஸுக்கும் (C) குறைவாகப் பதிவான வெப்பநிலை விவரங்கள் இங்கே:
தாளவாடி, ஈரோடு - 11.8C
ஓசூர் - 13.0C
தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி - 13.5C
காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி - 13.5C
சூளகிரி, கிருஷ்ணகிரி - 14.2C
போச்சம்பள்ளி, தர்மபுரி - 14.7C
அரூர், தர்மபுரி - 15.1C
குன்னத்தூர், கோயம்புத்தூர் - 15.1C
தர்மபுரி - 15.5C
தொண்டாமுத்தூர், கோயம்புத்தூர் - 15.6C
திருபத்தூர் - 15.7C
பெரியநாயக்கன்பாளையம், கோயம்புத்தூர் - 15.9C
சேந்தமங்கலம் - 15.9C
கோயம்புத்தூர் - 16.0C
மதுரை - 16.2C
கடவூர், கரூர் - 16.3C
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி - 16.3C
கிணத்துக்கடவு, கோயம்புத்தூர் - 16.4C
திருத்தணி - 16.5C
வம்பன், புதுக்கோட்டை - 16.6C
சேலம் - 16.7C
ஓமலூர், சேலம் - 16.7C
காட்பாடி, வேலூர் - 16.8C
துவாக்குடி, திருச்சி - 16.9C
கரூர் - 17.0C
திருப்பூர் - 17.0C
திருவண்ணாமலை - 17.0C
கோவில்பட்டி, தூத்துக்குடி - 17.0C
வேலூர் - 17.1C
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் 21 டிகிரி செல்சியஸுக்கும் (C) குறைவாகப் பதிவான வெப்பநிலை விவரங்கள்:
நாகப்பட்டினம் - 19.0C
காரைக்கால் - 19.4C
பாண்டிச்சேரி - 19.5C
கடலூர் - 19.6C
தூத்துக்குடி - 19.7C
பரங்கிப்பேட்டை - 19.8C
சென்னை விமான நிலையம் - 20.0C
தொண்டி - 20.4C
கும்மிடிப்பூண்டி - 19.4C
சென்னை - 20.6C
தென்னிந்தியாவின் பிற முக்கிய நகரங்களில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை:
பெங்களூர் விமான நிலையம் - 12.4C
ஹைதராபாத் - 13.8C
பெங்களூர் - 14.6C
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Chennai Rain: சென்னையில் இன்று விட்டு விளாசப் போகுது! இனி ஒரு வாரத்துக்கு கனமழை தான்.. வானிலை மையம் எச்சரிக்கை! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications