Cyclone Ditwah: என்ட்ரி ஆன “டிட்வா” புயல்.. சென்னையை நோக்கி நகர்கிறது? 29, 30 ஆம் தேதி சம்பவம் தான்!
சென்னை: மலாக்கா ஜலசந்தி பகுதியில் உருவான 'சென்யார்' புயல் இந்தோனேசியா கடற்கரையை கடந்து வலுவிழந்தது என்றும், வங்க கடலில் புதிதாக ஒரு புயல் "டிட்வா" (Cyclone Ditwah) உருவாகி உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. இது புதுவை, சென்னை, தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது மதியம் 2 மணி நிலவரப்படி இந்த புயல் சென்னைக்கு 700 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
புயல் உருவாகும் என கூறப்பட்டதை தொடர்ந்து, இன்று காலையில் தமிழகம், புதுச்சேரியிலுள்ள துறைமுகங்களில் 1 ஆம் எண் எச்சரிக்கை புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் வரும் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலுவிழந்த சென்யார் புயல்
அந்தமான் அருகே மலக்கா ஜலசந்தியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலகாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய சென்யார் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் இந்தோனேசியா அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
ஆனால் மலாக்கா ஜலசந்தி பகுதியில் உருவான 'சென்யார்' புயல் இந்தோனேசியா கடற்கரையை கடந்து வலுவிழந்தது. இந்த நிலையில், வங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
உருவாகியது புதிய புயல்
தென்மேற்கு வங்க கடல், தென்கிழக்கு இலங்கை பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது மேலும் மேலும் தீவிரம் அடைந்து அடுத்த 12 மணி நேரத்தில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரம் அடையும். அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் தீவிரம் அடைந்து புதுவை, சென்னை, தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என சொல்லப்பட்டிருந்தது.
இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. அதாவது வங்கக் கடலில் டிட்வா புயல் உருவானது என்றும் தற்போது சென்னையில் இருந்து 700 கிமி தொலைவியில் மையம் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமன் நாடு பரிந்துரைத்த "டிட்வா" என்ற பெயர் இந்த புயலுக்கு வைக்கப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
இதற்கிடையே, தமிழகம், புதுச்சேரியிலுள்ள துறைமுகங்களில் 1 ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள சூழலில் இந்த புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் ஏற்கனவே கடலுக்கு சென்ற மீனவர்களும் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை குறிப்பதாகும்.
சென்னையில் இருந்து 700 கிமீ தொலைவில்
இந்த புயல் சென்னை மற்றும் ஆந்திரா இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வட தமிழகம், தென் ஆந்திர பகுதிகளுக்கு இடையே நகர வாய்ப்பு உள்ளது. இதனால் வரும் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, கடலோர மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
-
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications