அர்னாப் புயல்! 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்! 11 மட்டும் ஏற்றவே கூடாது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடலில் நாளை அர்னாப் புயல் உருவாகும் நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளை காலை புயலாக மாறக் கூடும். இந்த புயலுக்கு வங்கதேசம் பரிந்துரைத்த அர்னாப் என்ற பெயர் சூட்டப்பட்டது.

weather

இது அதிதீவிர புயலாக மாறி ஆந்திராவின் பாபட்லா- விசாகப்பட்டினம் இடையே வரும் 28ஆம் தேதி கரையை கடக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த புயலால் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. எனினும் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும், நீலகிரி, கோவை, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்காலிலும் இன்று மிக கனமழை பெய்யக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக்கூடும். நாமக்கல், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் வங்கக் கடலில் புயல் உருவாகவுள்ள நிலையில் அதை குறிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள 7 துறைமுகங்களிலும் புதுவை, காரைக்காலில் உள்ள 2 துறைமுகங்களிலும் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, புதுவை, காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் இந்த எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

1ஆம் எண் புயல் முதல் 11 ஆம் எண் புயல் வரை எச்சரிக்கை கூண்டுகள் குறித்த தகவல்களை பார்க்கலாம்.

புயல் கூண்டு 1- இந்த கூண்டு ஏற்பட்டால் புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் நிலவுகிறது என்பது அர்த்தம். பலத்த காற்றும் வீசும்.

புயல் கூண்டு 2- புயல் உருவாகியுள்ளது என்பதை எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது. இந்த எச்சரிக்கையை பார்த்ததும் துறைமுகத்தை விட்டு கப்பல்கள் வெளியேற்றப்பட வேண்டும்.

புயல் கூண்டு 3- இந்த கூண்டு ஏற்றப்பட்டால் திடீர் காற்றுடன் மழை பெய்யும் என்று அர்த்தம்.

புயல் கூண்டு 4- துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து என்றும் உள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை என்றும் அர்த்தம்.

புயல் கூண்டு 5- இந்த கூண்டு ஏற்றப்பட்டால் துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையை கடக்கும்.

புயல் கூண்டு 6- இந்த கூண்டு ஏற்றப்பட்டால் துறைமுகத்தின் வலது பக்கமாக புயல் கரையை கடக்கும்.

புயல் கூண்டு 7- துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம் என்பதற்கான எச்சரிக்கை

புயல் கூண்டு 8- புயல் வலுப்பெற்று தீவிர புயலாகவோ அல்லது அதிதீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது, மேலும் வலுப்பெற்ற புயல் துறைமுகத்தின் இடதுபக்கமாக கடக்கும் என்பது அர்த்தம்.

புயல் கூண்டு 9- இந்த கூண்டு ஏற்றப்பட்டால், வலுப்பெற்ற தீவிர புயலாகவோ அல்லது அதிதீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது. துறைமுகத்தின் வலதுபக்கமாக கடக்கும் என்று பொருள்.

புயல் கூண்டு 10- அதி தீவிர புயலாக உருவாகியுள்ள புயல் துறைமுகம் அல்லது அருகே கடந்து செல்லும் போது பெரிய அபாயம் ஏற்படும்.

புயல் கூண்டு 11- உச்சக்கட்ட எச்சரிக்கையை குறிக்கும். அதி தீவிர புயலால் வானிலை மையத்துடன் தகவல் துண்டிக்கப்பட்டது. புயலால் பெரும் சேதம் ஏற்படும் அபாயம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+