Cyclone ditwah: எங்கடா அவன்? பைபாஸ்லயே வந்துட்டு பொசுக்குனு போயிருச்சே! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன தகவல்!
சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ள நிலையில், சென்னையை நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திர கடற்கரை வழியாகச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வறண்ட காற்று உருவாகி புயல் வலுவிழந்துள்ளதாகவும், நாளை வரை சென்னையில் மழை மேகங்கள் உருவாகும் எனவும், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூருக்கு இன்றும் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்படலாம் என 'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
டிட்வா புயல் நாகையில் இருந்து சுமார் 60 கி.மீ தூரத்திலும், சென்னையில் இருந்து 230 கி.மீ தூரத்திலும் தற்போது தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. ஆரம்பத்தில் இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, சென்னை உட்பட வட தமிழகம் முழுவதும் பலத்த மழை கொட்டும் என கணிக்கப்பட்டிருந்தது.
ஆனால் எதிர்பாராத வகையில் உருவான வறண்ட காற்று, கடலிலிருந்து வரும் ஈரக்காற்றைத் தடுக்க காரணமாகி, புயலின் வலிமை திடீரென குறைந்ததாக பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

பிரதீப் ஜான் தனது பதிவில், "வறண்ட காற்று மற்றும் ஈரக்காற்று முறிவு காரணமாக டிட்வா புயல் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிவிட்டது. அதன் காரணமாக, மழை அடிப்படையில் அதிக தாக்கம் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மட்டுமே காணப்பட்டது. மயிலாடுதுறையில் மட்டும் 140-220 மிமீ மழை பதிவானது. இதனுடன் சேர்த்து சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் தொடர்ந்து மழை பெறும்.
புயல் பலவீனமடைந்தாலும், இது முற்றிலும் முடிந்துவிட்ட நிலை அல்ல. அடுத்த 24 மணிநேரத்திற்கு மிகுந்த மேகக்கவசம் இருக்காது. காலை நேரத்தில் மழை குறைவாக காணப்பட்டாலும், இன்று மாலை புதிய மேகக்கூட்டங்கள் உருவாகும். அது உருவான பிறகு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,
வேலூர், ராணிப்பேட்டை, இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று மாலை சென்னைக்கு மிக அருகில் புயல் வரலாம்" என்ற எச்சரிக்கையும் பதிவிட்டுள்ளார்.
பிரதீப் ஜான் மேலும் கூறியதாவது:," KTCC பகுதிகளில் (சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு) இன்று காலை வரை 30-70 மிமீ மழை பதிவு செய்துள்ளது. மேகங்கள் மீண்டும் உருவாகினால், நாளைக்குள் 50-70 மிமீ வரை கூடுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அட்சரேகைக்குக் கீழே இருக்கும் வரை, மழைக்கான வாய்ப்பு நீடிக்கும். இன்றும் IMD ஆரஞ்சு எச்சரிக்கை வெளியிட்டால் கூட ஆச்சரியப்பட வேண்டியதில்லை. சென்னையில் இந்த நவம்பர் மாதம் பெய்த மழை, 2016க்கு பிறகு மிகக் கடுமையான நவம்பர் மழை. இதுகுறித்து தனி பதிவும் பகிரப்படும்" என கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications