தீவிர புயலாக உருவெடுக்கிறது மிக்ஜங்.. செமஸ்டர் தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு.. மழையில் நனைகிறது சென்னை
சென்னை: சென்னையில் கனமழை காரணமாக, பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்துமே ஒத்திவைக்கப்படுவதாக மறுபடியும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியிருக்கிறது.. இது நாளைய தினம் புயலாக மாறக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

சென்னை: இந்த புயல் சென்னை மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும் என்று தற்போது சொல்லப்பட்டுள்ளது... அதேபோல, நாளை மறுநாள் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையல், இது வேகம் குறைந்து டிசம்பர் 5ம் தேதி கரையை கடப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதையொட்டி, தென் மேற்கு வங்கக் கடலில் புதுவையிலிருந்து சுமார் 630 கி.மீ. கிழக்கு- தென்கிழக்கேயும் சென்னையிலிருந்து 630 கி.மீ. கிழக்கு தென் கிழக்கிலும் நிலவுகிறது.
வடதமிழகம்: இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், இன்று அதாவது டிசம்பர் 3ம் தேதி புயலாகவும் வலுப்பெற்று, 4ம் தேதி காலை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள வடதமிழக- புதுவை கடலோர பகுதிகளில் நிலவுக் கூடும் என்றும், பிறகு கடலோர பகுதிகளை ஒட்டி வடதிசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கடக்கக் கூடும் என்றும் சென்னை வானிலை மையமும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
புயல் ஒருபக்கம், பருவமழை இன்னொரு பக்கம் என தமிழகமே குளிர்ந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசும் இது தொடர்பான முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. அந்தவகையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக, களப்பணியில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட போவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்திருந்தது. அதுபோலவே, காவல்துறையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கனமழை: இதனிடையே, ஆந்திர மாநிலத்தில் மிக்ஜாம் புயலானது கரையைக் கடந்தாலும் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாளை 4-ம் தேதியன்று திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யக்கூடும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. முன்னேற்பாடு காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைப்பு: சென்னையில் பெய்து வரும் கனமழை மற்றும் தேங்கி இருக்கும் மழை நீரின் காரணமாக சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. கடந்த 3 நாட்களுக்கு முன்பே தேர்வுகள் நடைபெறவிருந்தது.. அப்போது, இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகம் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டிருந்தது.. அதில், "நவம்பர் 30ம் தேதி நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்படுகின்றன.
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் எந்த தேதியில் நடைபெறும் என்பது பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். இன்றைய தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ள காரணத்தால் தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு வர வேண்டிய அவசியம் இல்லை." என்று தெரிவித்திருந்தது.
திடீர் அறிவிப்பு: இந்நிலையில், மிச்சாங் புயல் எதிரொலியால் திங்கட்கிழமை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.. தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழகத்திலும் வரும் 4ம் தேதி நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் கிழ் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளின் நவம்பர், டிசம்பர் மாத பருவத் தேர்வுகளும் தற்போது நடைபெற்று வரும் நிலையில், திங்கட்கிழமை நடைபெற உள்ள தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு: அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வியில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகளும், பல்கலை மற்று அதன் இணைப்பில் உள்ள கல்லூரிகளில் திங்கட்கிழமை நடைபெறவிருந்த பொறியியல் கல்லூரிகளின் பருவத்தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications