ஃபுல் ஃபார்முக்கு ரெடியாகும் மிக்ஜாம் புயல்! "இந்த" பகுதி ஹாட்ஸ்பாட்டா.. வானிலை ஆய்வாளர்கள் கணிப்பு
சென்னை: காற்றழுத்தத்தின் சுழற்சிதான் அது எங்கே கரையை கடக்கும் என்பதை முடிவு செய்யும் என சென்னை வெதர் கூறியுள்ளது.
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவு தென் மேற்கு வங்கக் கடலில் புதுவையிலிருந்து சுமார் 630 கி.மீ. கிழக்கு- தென்கிழக்கேயும் சென்னையிலிருந்து 450 கி.மீ. கிழக்கு தென் கிழக்கிலும் நிலவுகிறது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நாளை டிசம்பர் 3ஆம் தேதி புயலாகவும் வலுப்பெற்று, 4ஆம் தேதி காலை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள வடதமிழக- புதுவை கடலோர பகுதிகளில் நிலவுக் கூடும். பிறகு கடலோர பகுதிகளை ஒட்டி வடதிசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கடக்கக் கூடும்.
கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். கடலில் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த நிலையில் இந்த புயலானது கரையை கடப்பதில் சில ட்விஸ்ட்கள் இருக்கின்றன.
முதலில் சென்னை - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என சொல்லப்பட்டது. இதையடுத்து தற்போது நெல்லூர் டூ மசூலிபட்டினம் அருகே கரையை கடக்கிறது. இது 4ஆம் தேதி கரையை கடக்கும் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது டிசம்பர் 5 ஆம் தேதிதான் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.
எனினும் காற்றின் சுழற்சிதான் எங்கே கரையை கடக்கும் என்பதை தீர்மானிக்கும் என்கிறார்கள். இதுகுறித்து சென்னை வெதர் எனும் சமூகவலைதளத்தின் தனியார் வானிலை ஆய்வாளர் கூறியிருப்பதாவது: கனமழை முதல் மிக கனமழை வரை சென்னையில் பெய்வதற்கு வாய்ப்புள்ளது. அதாவது கடற்கரைக்கு அருகே காற்றழுத்தம் வருகிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் எப்படியும் சுழல தொடங்கிவிட்டது. அதுதான் எங்கு கரையை கடக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும். சென்னை- நெல்லூர் வரை ஹாட்ஸ்பாட்டாக இருக்கும். கடந்த நிவர் புயலின் போதும் கூட சென்னை- புதுச்சேரி ஹாட்ஸ்பாட்டாக இருக்கும் என்றும் காற்றின் அளவு மணிக்கு 100 கி.மீ. இருக்கும் என கணித்திருந்தேன். அது போல் நடந்தது என அந்த ட்வீட்டுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications