மிக்ஜாம் புயலின் கண் பகுதி! சென்னை- பழவேற்காடு கடலை பிரித்து மேய்ந்த பகீர் புகைப்படம் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வழியாக ஆந்திராவுக்கு சென்ற மிக்ஜாம் புயல் டிசம்பர் 4ஆம் தேதி சென்னை- பழவேற்காடு கடற்கரையை பிரித்து மேய்ந்துவிட்டதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயலால் கடந்த டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. இதனால் பல பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துவிட்டது. வீட்டில் வைத்திருந்த மின்சாதன பொருட்கள், பர்னிச்சர்கள் எல்லாம் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.

Cyclone michaung grazed Chennai - Palaverkadu coast on December 4

மழை நின்று 7 நாட்களாகியும் சென்னையின் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் வடியவே இல்லை. ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை சுமார் 100 மி.மீ. முதல் 200 மி.மீ மழை பெய்திருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்த ஒரு புயல் டிசம்பர் 9ஆம் தேதி உருவாவதாகவும் அதுவும் சென்னையை தாக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் டிசம்பர் 9ஆம் தேதி அரபிக் கடலில் காற்றழுத்தம் உருவானதாகவும் இதனால் தென் தமிழகம், கேரளாவில் மழை பெய்யும் என்றும் இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு பாதிப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் அரபிக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவானது. இதனால் அம்பாசமுத்திரம், கோபி, கோவை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக மழை பொழிவை ஏற்படுத்தியுள்ளது. தென் மாவட்டங்களில் கடுங்குளிருடன் மழையும் பெய்து வருவதால் மக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 4 ஆம் தேதி மிக்ஜாம் புயலின் கண் பகுதி சென்னை- பழவேற்காட்டில் பிரித்து மேய்ந்ததை பாருங்கள். 1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஸ்ரீஹரிகோட்டா புயல் சென்னை கடலோரத்திற்கு இணையாக நகர்ந்தது.

சென்னைக்கு அருகே வந்த புயல்களில் இது வலுவான புயலாகும். அது சிறியதாக இருந்தாலும் வலுவான புயலாகும். சென்னை- பழவேற்காடு மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளை கடுமையாக தாக்கியது. சென்னைக்கும் கடுமையான மழை பெய்தது. 1996 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு புயல் ஆந்திராவுக்கு சென்றது. அது சென்னை கடலோரம் வழியாக ஆந்திராவுக்கு சென்றதை அடுத்து 3 நாட்களாக நுங்கம்பாக்கத்தில் 65 செ.மீ. மழை பெய்தது. கொசஸ்தலை ஆற்ரில் 85 செ.மீ. மழை பெய்தது.

இந்திய கடற்கரையில் சிறிய புயல் உருவானது. அதுவும் கடந்த அக்டோபர் 2006 ஆம் ஆண்டு சென்னை கடற்கரையை பிரித்து மேய்ந்துவிட்டது. இதையடுத்து ஆந்திராவுக்கு சென்றுவிட்டது. அங்கு 2 முதல் 3 நாட்களில் 100 செ.மீ. மழை பெய்தது. சென்னையில் கூட 3 நாட்களில் 40 செ.மீ. மழை பெய்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+