அடித்து ஆடிய மிக்ஜாம்- சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து புறப்படும் இத்தனை ரயில்கள் இன்று ரத்து
சென்னை: சென்னைக்கு அருகே 30 மணி நேரம் வங்க கடலில் நின்று நிதானமாக பேயாட்டம் ஆடிச் சென்ற மிக்ஜாம் புயல் இப்போது ஆந்திராவில் ருத்ரதாண்டவமாடுகிறது. மிக்ஜாம் புயல் கொட்டித் தீர்த்த பெருமழையால் இன்றும் பல ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.
மிக்ஜாம் புயல் மழை பெருவெள்ளம் காரணமாக நேற்றும் பல ரயில் சேவைகள் அடியோடு நிறுத்தப்பட்டன. திருச்சியில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம் வழியாக சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ், குருவாயூரில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ஆகியவை விழுப்புரம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன. அங்கிருந்து பயணிகள் சென்னைக்கு பேருந்துகளில் சென்றனர். மேலும் சென்னை நோக்கி தென்மாவட்டங்களில் இருந்து வந்த 14 ரயில் சேவைகள் நேற்று ரத்து செய்யப்பட்டிருந்தன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 12 ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. மொத்தம் 26 ரயில் சேவைகள் நேற்று ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில் இன்றும் பல ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. இன்று ரத்து செய்யப்பட்ட ரயில் விவரங்கள்:
சென்னை சென்ட்ரல்- மைசூர் சதாப்தி எக்ஸ்பிரஸ்
சென்னை சென்ட்ரல்- கோவை எக்ஸ்பிரஸ்
சென்னை சென்ட்ரல்- திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ்
சென்னை சென்ட்ரல்- கேஎஸ்ஆர் பெங்களூர் டபுள் டக்கர் ஏசி
சென்னை சென்ட்ரல்- பெங்களூர் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்
சென்னை சென்ட்ரல்- லக்னோ ஜங்ஷன் எக்ஸ்பிரஸ்
சென்னை சென்ட்ரல்- சூலூர்பேட்டை எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல்
சென்னை சென்ட்ரல்- பாட்னா ஜங்ஷன் எக்ஸ்பிரஸ்
சென்னை சென்ட்ரல்- ஷாலிமர் எக்ஸ்பிரஸ்
சென்னை சென்ட்ரல்- கயா எக்ஸ்பிரஸ்
சென்னை சென்ட்ரல்- விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ்
சென்னை சென்ட்ரல்- அகமதாபாத் நவஜீவன் எக்ஸ்பிரஸ்
சென்னை எழும்பூர்- மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ்
சென்னை எழும்பூர்- புதுச்சேரி மெமு எக்ஸ்பிரஸ்
Cancellation of train services on 05.12.2023, passengers are requested to take a note on this #SouthernRailway #COMK #ChennaiFloods #ChennaRains #Chennai #CycloneMichuang #StaySafe pic.twitter.com/YXMNwpOH7W
— Southern Railway (@GMSRailway) December 4, 2023
சென்னை எழும்பூர்- திருச்சிராப்பள்ளி சோழன் எக்ஸ்பிரஸ்
சென்னை எழும்பூர்- குருவாயூர் எக்ஸ்பிரஸ்
சென்னை சென்ட்ரல்- கோவை ஸ்பெஷல் வந்தே பாரத்
மதுரை- நிஜாமுதீன் தமிழ்நாடு சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ்
மெட்ரோ ரயில்கள்: தமிழ்நாடு அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளதால் சென்னையில் மெட்ரோ ரயில்கள், ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும். அதாவது காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் 10 மணி வரை மற்றும் இரவு மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications