ஆரம்பிக்கலாமா.. இனிமேதான் மழை பிக் அப் ஆக போகுது.. தமிழ்நாடு வெதர்மேன் போட்ட பதிவு
சென்னை: சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் புயலின் தாக்கம் காரணமாக இன்று காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனிடையே, மழையின் தீவிரம் இன்னும் அதிகரிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றது. மிக்ஜாம் புயல், தெற்கு ஆந்திரா-வடதமிழக கடலோர மாவட்டங்களுக்கு அருகே நாளை நிலவும் என்றும், தொடர்ச்சியாக வடமேற்கு திசையில் நகர்ந்து நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே நாளை மறு நாள் தீவிர புயலாக கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

புயல் வடதமிழக கடலோர பகுதிகளை நெருங்கி வருவதன் காரணமாக, வடதமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழை வெள்த்து வாங்கியது. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று காலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. அவற்றை, அதற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.
'மிக்ஜாம்' புயல் வடதமிழக கடலோர பகுதிகளை நெருங்கி வருவதால் கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றம் அதிகளவு காணப்பட்டது. சென்னை மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் கடற்கரை, நீலாங்கரை கடற்கரை, காசிமேடு, எண்ணூர் ஆகிய பகுதிகளில் கடல் சீற்றம் காணப்பட்டது. சென்னை மெரினா கடற்கரைக்கு போக அனுமதி மறுக்கப்பட்டது.
அதேபோல், புதுவை கடற்கரைகளுக்கும் செல்ல அனுமதி அளிக்கபபடவில்லை. புயலின் மையப்பகுதி மணிக்கு 7 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியது. புயல் நெருங்கி வர மழையின் தீவிரம் அதிகரித்ததுள்ளது. சென்னையில் இன்று இரவு முழுவதும் மழை கொட்டி தீர்க்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது. அதன்படி சென்னையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது இந்த நிலையில், மழை எந்த அளவுக்கு பெய்யும் என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான், தனது தமிழ்நாடு வெதர்மேன் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு கூறியிருந்தாவது:
அடர்ந்த மேகங்கள் சென்னைக்கு மிக அருகில் உள்ளன. அடுத்த சில நிமிடங்களில் அவை சென்னை மீது விழுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இனிமேல் தான் மழையின் தீவிரம் அதிகரிக்க உள்ளது" என்று கூறியிருந்தார். மேலும் பிரதீப் ஜான் மழை குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: அடுத்த சில மணி நேரங்களுக்கு சென்னையில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை விட்டு விட்டு பெய்து வந்த மழை, இனி தொடர்ந்து 1 மணி நேரம் அல்லது அதற்கு மேலாக கூட பெய்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. நாளை ஒரு நாள் மட்டும் இந்த புயலின் தாக்கம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருக்கும். நாளை இரவு அல்லது 5 ஆம் தேதி தேதி காலையில் இருந்தே புயலின் தாக்கம் குறைந்துவிடும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications