மிக்ஜாம் 'பேயா'ட்டம்: சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்கள் செல்லும் 10 ரயில்கள் ரத்து
சென்னை: மிக்ஜாம் புயலின் சூறாவளி ஆட்டத்தால் சென்னை பெருநகரமும் புறநகரமும் பேய்மழை வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதனால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதேபோல சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் வரும் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையக்கு முந்தைய பேசின்பிரிட், வியாசர்பாடி ரயில் நிலையங்களிடையேயான பாலத்தில் பெரும் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனையடுத்து தெற்கு ரயில்வே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் 26 ரயில்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து போடி செல்லும் எக்ஸ்பிரஸ், ரயில், ஆலப்புழா எக்ஸ்பிரஸ், காவேரி எக்ஸ்பிரஸ், ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ், பாலக்காடு எக்ஸ்பிரஸ், கொல்லம் - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல்- மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள், சென்னை சென்ட்ரல்- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிவையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. திருப்பதி சப்தகிரி , கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ், பெங்களூர் டபுள் டக்கர், மைசூர் சதாப்தி, பெங்களூரு பிருந்தாவன் ஆகிய ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
முன்னதாக மிக்ஜாம் புயல் காரணமாக மொத்தம் 142 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் 10 ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
*நாகர்கோவில் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் (22658),
*மதுரை - சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12638),
*செங்கோட்டை - சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் (12662),
*நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20692),
*கொல்லம் - சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (20636),
*கன்னியாகுமரி - சென்னை எக்ஸ்பிரஸ் (12634),
*செங்கோட்டை - தாம்பரம் எக்ஸ்பிரஸ் (20684),
*திருநெல்வேலி - சென்னை நெல்லை எக்ஸ்பிரஸ் (12632),
*தூத்துக்குடி - சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் (12694),
*ராமேஸ்வரம் - சென்னை எக்ஸ்பிரஸ் (22662),
*ராமேஸ்வரம் - சென்னை எக்ஸ்பிரஸ் (16752),
*மதுரை - டெல்லி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் (12651),
*திருச்செந்தூர் - சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் (20606),
*குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் (16128)
ஆகிய ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications