ஓட்டேரி ஏரி வெள்ளத்தில் மிதக்கும் வண்டலூர் உயிரியல் பூங்கா - 30 மரங்கள் விழுந்தன- விலங்குகள் கதி?
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குள் ஓட்டேரி ஏரி வெள்ளம் பாய்ந்தோடுவதால் சுற்றுச் சுவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மிக்ஜாம் பேய்மழையின் சூறாவளி ஆட்டத்தால் 30க்கும் மேற்பட்ட மரங்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குள் விழுந்துள்ளன. இந்த பேய்மழையால் விலங்குகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் விவரம் இன்னமும் தெரியவில்லை.
சென்னை மற்றும் புறநகரில் நேற்று இரவு தொடங்கிய மிக்ஜாம் புயலின் ருத்ரதாண்டவம் சற்று முன்னர் வரை நீடித்தபடியே இருந்தது. நேற்றும் இன்றுமாக சுமார் 40 செமீ மழை கொட்டித் தீர்த்துவிட்டு இப்போது மிக்ஜாம் புயல் ஆந்திராவுக்குள் நுழைந்துள்ளது. ஆந்திராவில் நெல்லூர்- மச்சிலிபட்டணம் இடையே நாளை முற்பகல் மிக்ஜாம் புயல் கரையைக் கடக்கிறது.

சென்னை புறநகரில் அனைத்து ஏரிகளும் நிரம்பி உபரி நீரானது குடியிருப்புகள், சாலைகளில் காட்டாற்று வெள்ளம் போல பாய்ந்தோடியது பொதுமக்களை அப்படியே உறையவைத்தது. சென்னை வண்டலூர் உயிரியப் பூங்காவானது ஓட்டேரி ஏரியின் ஒரு பகுதி. இந்த பெருமழையில் ஓட்டேரி ஏரி நிரம்பி வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இதில் வண்டலூர் உயிரியல் பூங்கா சுற்றுச் சுவரி பெரும்பகுதி சேதமடைந்துவிட்டது. மேலும் பூங்காவுக்குள் 30க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்து முறிந்தன. இந்தப் பெருமழை பேய் வெள்ளத்தில் விலங்குகளுக்கு எத்தகைய பாதிப்புகள் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications