சென்னையில் கொட்டும் பேய் மழை.. எப்போது நிற்கும் தெரியுமா? மிரட்டும் மிக்ஜாம் புயல் ‛எபெக்ட்’
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் தான் சென்னையில் பெய்யும் கனமழை எப்போது நிற்கும்? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
வங்கக்கடல் பகுதியில் 'மிக்ஜாம்' புயல் நேற்று உருவானது. இந்த புயல் படிப்படியாக நகர்ந்து இன்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவ உள்ளது.

அதன்பிறகு தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து நாளை தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்க உள்ளது.
இந்த புயல் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் விடியவிடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கம், அண்ணாசாலை, ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி, திருவொற்றியூர், எண்ணூர், மெரினா கடற்கரை உள்பட பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இரவில் இருந்தே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளமாக ஓடுகிறது.
சென்னை கால்வாய்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மழை நீர் வடிகால் அமைப்புகளை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. பல இடங்களில் கார்களை வெள்ளம் அடித்து சென்றுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கி உள்ளனர். அதோடு பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இது மக்களுக்கு கூடுதல் சிரமத்தை தந்துள்ளது.
இந்நிலையில் தான் சென்னையில் பெய்யும் அதி கனமழை எப்போது நிற்கும்? என்ற கேள்விகள் பலருக்கும் எழுந்துள்ளது. இதுபற்றி வானிலை ஆய்வு நிபுணர்கள் கூறுகையில், ‛‛மிக்ஜாம் புயல் என்பது வங்கக்கடலில் உருவாகி ஆந்திராவில் நாளை கரையை கடக்கிறது. செயற்கைகோள் படங்களின் அடிப்படையில் பார்த்தால் இந்த புயல் தற்போது சென்னையை தான் சுற்றி வருகிறது. புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து சென்றாலும் கூட அந்த நகர்வு என்பது மிகவும் மெதுவாக இருக்கிறது.
இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதி கனமழை பெய்து வருகிறது. புயல் ஆந்திரா நோக்கி நகரநகர சென்னையில் மழை என்பது குறையும். அப்படி பார்த்தால் இன்று இரவு 12 மணி வரை சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கனமழை என்பது இருக்கும். இருப்பினும் அதி கனமழை என்பது மாலையில் இருந்தே குறையலாம். நாளை அதிகாலையில் பல இடங்களில் லேசான மழை இருக்கும். சில இடங்களில் கனமழை இருக்கும்'' என தெரிவித்துள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications