மிக்ஜாம் புயல்: திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரிக்கு வரும் 45,000 கன அடி நீரும் அப்படியே வெளியேற்றம்!
திருவள்ளூர்: மிக்ஜாம் புயல் கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னையை அடுத்த பூண்டி ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கும் 45,000 கன அடி நீரும் அப்படியே கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்படுவதால் கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவெடுத்த மிக்ஜாம் புயல் தமது கோரத்தாண்டவத்தை காட்டிக் கொண்டிருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 47 ஆண்டுகள் இல்லாத பெருமழையை கொட்டித் தீர்த்திருக்கிறது மிக்ஜாம் புயல். ஒரு சில மணிநேரங்களிலேயே சராசரியாக 20 செமீ மழையை கொட்டிவிட்டது மிக்ஜாம் புயல். வடகிழக்கு பருவமழை 6% பற்றாக்குறை என்கிற நிலைமையை ஒரு சில மணிநேரங்களிலேயே பெய்த மழை 29% கூடுதல் பருவமழை என தலைகீழாகப் புரட்டிவிட்டது. இதனால் சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாகி கிடக்கின்றன.

சென்னையை சுற்றிய ஏரிகள் அனைத்தும் நிரம்பி உபரி நீர் அப்படியே குடியிருப்புகள், சாலைகளில் ஆற்று வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 8,000 கன அடி நீர் அடையாற்று ஆற்றில் திறந்துவிடப்பட்டு வருகிறது.
இதேபோல திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து 25,000 கன அடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆந்திரா எல்லையில் உள்ள திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 45,000 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரிக்கு வரும் அவ்வளவு நீரையும் அப்படியே வெளியேற்றி வருகின்றனர். இதனால் கொசஸ்தலை ஆற்றில் பெரும் வெள்ளம் கரைபுரள்கிறது. கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications