சென்னைக்கு அருகே புயல் சின்னம்.. வங்க கடலில் "சம்பவம்".. அடுத்த 3 மணி நேரத்தில் வெளுக்க போகுதாம் மழை
சென்னை: வரும் 14-ம் தேதி முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், வங்கக்கடலில் புயல் உருவாகும் வாய்ப்புள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தற்போது பருவமழை தொடங்கி பெய்து வரும்நிலையில், இந்த மழை நீடிக்கும் என்றும் வானிலை அறிவிப்புகள் வெளியாகி உள்ளன., நேற்றுகூட, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

தமிழகம்: அதன்படி, தமிழகத்தில் வரும் 14-ம் தேதி முதல் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இன்று சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 12, 13-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும், 14, 15, 16-ம் தேதிகளில் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி: அதேபோல, 10-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகத்தில் 9 செ.மீ., திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, சென்னை அம்பத்தூரில் 8 செ.மீ., திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில்7 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் களியல், புழல், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வங்கக்கடலில், சென்னைக்கு சற்று தொலைவில், வரும் 15ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வரும் 15ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், கிழக்கு திசை காற்றிலும் வேக மாறுபாடு நிலவுவதால், தமிழகம், புதுச்சேரியில் பல இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தஞ்சாவூர்: அதுமட்டுமல்ல, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள், நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில், இன்று பகல் வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குட்நியூஸ் வெளியாகி உள்ளது. இன்று முதல், 15ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை தொடரும் என்றாலும், மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லையாம்.
அதேநேரம், வங்கக்கடலின் தென் மேற்கு பகுதியில், வரும் 15ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது புயல் சின்னமாக வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும், இது, படிப்படியாக வட மேற்கில் நகர்ந்து, ஆந்திரா அருகே காற்றழுத்த மண்டலமாக மாறி, பின் புயலாக உருவாகி, ஆந்திராவில் கரை கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தன்னுடைய அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
5 மாவட்டங்கள்: அதேபோல, கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு முழுக்க மழை இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ள நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்குள், 5 மாவட்டங்களில் லேசான இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications