அரபிக்கடலில் உருவான ”சக்தி” புயல்.. இனி மழை விடாது.. சென்னை உள்பட 12 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தற்போது புயலாக உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு "சக்தி" புயல் என பெயரிடப்பட்டுள்ளது. இது இன்னும் தீவிர புயலாக மாறக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் இன்று தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்பட 12 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் நேற்று மதியம் வரை பல்வேறு இடங்களில் வெயில் சுட்டெரித்தது. ஆனால் மதியத்திற்கு பிறகு கிளைமேட் அப்படியே மாறி மழை கொட்டியது. தழிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. திண்டுக்கல், விருதுநகர், கோவில்பட்டியில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இன்று காலையில் சென்னையில் லேசான மழை பெய்தது.

Cyclone Rain Chennai

வானிலை அறிவிப்பு

இந்த நிலையில் அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தற்போது புயலாக உருவாகியுள்ளது என்றும் இன்று தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்பட 12 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும்

சௌராஷ்ட்ரா கடலோரப்பகுதிகள் மாற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, கடந்த 1 ஆம் தேதி காலை வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு நகர்ந்து, அன்று மாலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று, நேற்று மாலை புயலாக வலுப்பெற்றது. இது அதற்கடுத்த 24 மணி நேரத்தில், சற்று மேற்குத் திசையில் நகர்ந்து, பின்னர் மேற்கு-தென்மேற்கே நகர்ந்து தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும். இந்த புயலுக்கு சக்தி புயல் என பெயரிடப்பட்டுள்ளது.

இன்று கனமழை பெய்யும் மாவட்டங்கள்

இதனால் இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை 5ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் செப்டம்பர் 6 முதல் 9 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் இன்று மழை வெளுக்கும்

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (03-10-2025): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னையில் நாளை (04-10-2025): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-34° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+