மூழ்கிருச்சே.. திக்குமுக்காடிய டெல்லி! ஒரே நாளில் 126.1 மிமீ கொட்டிய பெருமழை - 21 ஆண்டுகளில் அதிகம்
டெல்லி: 21 ஆண்டுகளில் இல்லாத வகையில் தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை கொட்டித் தீர்த்ததால் மாநகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன.
டெல்லியில் பருவமழைக்காலம் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் நேற்று வழக்கத்துக்கு மாறாக பெருமளவிலான மழை கொட்டித் தீர்த்தது. பருவமழையின் முதல் சுற்றிலேயே இந்த அளவுக்கு மழை பெய்ததால் அம்மாநில மக்கள் திகைத்துப்போய் உள்ளார்கள். ஒரே நாளில் 100 மிமீ அளவுக்கு பெரும் மழை பெய்து இருக்கிறது.

கடந்த 21 ஆண்டுகளில் ஜூலை மாதத்தில் இவ்வளவு பெரிய மழையை தலைநகர் டெல்லி கண்டது கிடையாது. நேற்று ஒரே நாளில் கொட்டித் தீர்த்த கனமழை என்பது டெல்லியில் பருவமழை காலத்தில் பெய்யும் மழை அளவில் 15 சதவீதமாகும். ஒரே நாளில் கொட்டிய பெருமழை காரணமாக சில மணி நேரங்கள் டெல்லியே திக்குமுக்காடியது.
சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக பல மணி நேரம் போக்குவரத்தும் முடங்கியது. சப்தர்கஞ்ச் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டும் 126.1 மிமீ மழை கொட்டித் தீர்த்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து டெல்லி அரசு அதிகாரிகள் தெரிவிக்கையில், ஒரே நாளில் கொட்டித் தீர்த்த 100 மிமீ மழை என்பது ஆண்டு பருவமழை அளவில் 15 சதவீதமாகும். இவ்வளவு பெரிய மழை கொட்டித் தீர்த்த பிறகு தொடர்ந்து மழை பெய்தால் சாலைகளில் தேங்கிய வெள்ளம் வடியாது. மழை நின்றவுடன் வெள்ள நீர் அகற்றப்படும் என்றனர்.

இன்று காலை முதலே டெல்லியின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. முக்கிய பாலமான மிண்டோ வெள்ளத்தில் மூழ்கியதால் அப்பகுதியில் உள்ள கடைகள் மூடப்பட்டு உள்ளன. வெள்ளத்தில் மூழ்கிய சாலைகளில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
டெல்லி ஜந்தர் மந்தர், சந்த்கி ராம் அகாரா, அம்ரிதா ஷெர்கில் மார்க், டிடியு மார்க், திர்பூர் மெயின் ரோடு, அண்ணை தெரசா கிரெசண்ட் பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து இருக்கின்றன. நேற்று வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்து இருக்கும் நிலையில், இன்றும் மஞ்சள் எச்சரித்து விடுத்து உள்ளதால் தொடர் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications