சென்னையில் நெட்வொர்க் இல்லாததால் முடங்கிய டிஜிட்டல் பரிவர்த்தனைகள்! செயல்படாத ஏ.டி.எம்.சென்டர்கள்!
சென்னை: சென்னையில் ஏற்பட்டுள்ள நெட்வொர்க் பிரச்சனையால் ஜி பே, பே.டி.எம்., கியூ ஆர் கோட் ஸ்கேன்னர் உள்ளிட்ட எல்லா டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் முடங்கியுள்ளன.
ஏ.டி.எம். செண்டர்களிலாவது பணம் எடுக்கலாம் என்று மக்கள் முயற்சித்தாலும் கூட பெரும்பாலான ஏ.டி.எம். செண்டர்கள் நெட்வொர்க் பிரச்சனையாலும், தண்ணீர் புகுந்ததாலும் இயங்கவில்லை. இதனால் சென்னையில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதனிடையே மக்கள் சிரமம் அறிந்து 3 லட்சம் பேருக்கு குறையாமல் மதிய உணவு அரசு சார்பில் விநியோகம் செய்யப்படுகிறது. அதே போல் 2 லட்சத்து 85,000 பால் பாக்கெட்களும் இன்று காலை அரசு சார்பில் சென்னை மாநகரம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
சென்னையை கடந்த 2 நாட்களாக புரட்டி எடுத்த மழை ஒரு வழியாக நள்ளிரவுடன் நின்றது. இதையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இன்னும் 2 நாட்களில் சென்னை பழைய நிலைக்கு திரும்பிவிடும், தண்ணீர் முழுமயாக அகற்றப்பட்டுவிடும் என அமைச்சர் கே.என்.நேரு உறுதி கொடுத்திருப்பதோடு அரசின் சீரமைப்பு பணிகளுக்கு பொதுமக்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயலால் கொட்டிய கனமழையானது சென்னையில் வரலாறு காணாத தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்தப் பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வர குறைந்தது மூன்று நாட்களாவது ஆகும் எனத் தெரிகிறது. 2015 சென்னை வெள்ளத்த்தின் போது எப்படி கார், இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் பழுதடைந்ததோ அதை போலவே இப்போதும் அதிகளவில் கார்களும், இரு சக்கர வாகனங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications