வலுவிழந்த டிட்வா.. 9 துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை கூண்டுக்கு தளர்வு.. வானிலை மையம் அறிவுறுத்தல்
சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேலும் வலுவிழந்த நிலையில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் சென்னைக்கு அருகில் கடலில் நிலை கொண்டிருந்த போது, கொஞ்சம் கொஞ்சமாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. அதன்பின் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. ஆனாலும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

கடந்த 5 நாட்களாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், தற்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்னும் 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னையில் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கிட வானிலை ஆய்வு மையம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.
வழக்கமாக புயல் உருவாகி கடலோரப் பகுதிகள் நோக்கி நகர்ந்து வரும் போது துறைமுகங்களில் புயல் குறித்த எச்சரிக்கைகளை விடுக்கும் வகையில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும். மொத்தமாக 1 முதல் 11 எண்கள் வரையிலான எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும். ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு விளக்கம் இருக்கின்றன. அந்த வகையில் இம்முறை 4ஆம் எண் புயல் கூண்டு வரை ஏற்றப்பட்டது.
டிட்வா புயல் சென்னைக்கு 200 கிமீ தூரத்தில் மையம் கொண்டிருந்த போது வலுவிழக்க தொடங்கியது. தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்க தொடங்கிய நிலையில், வானிலை ஆய்வு மையம் தரப்பில் துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்க அறிவுறுத்தி இருக்கிறது.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications