Cyclone Michaung: புயல், வெள்ளம், மழை காலங்களில் என்ன செய்யலாம், செய்யக் கூடாது?
சென்னை: மிக்ஜாம் புயல் கரையை கடக்கும் போதும் நிலை கொண்டிருக்கும் போதும் செய்ய வேண்டியது என்ன, செய்யக் கூடாதது என்ன?
1. கனத்த மழையின் போது வெளியே செல்லாதீர்கள். வீட்டுக்குள்ளேயே கவனமாக இருக்கவும். கதவு, ஜன்னல்களை இறுக்கமாக மூடி வைத்திருக்கவும்.

2. குழந்தைகளை வெளியே சென்று விளையாட அனுப்பாதீர்கள். தேங்கி நிற்கும் தண்ணீர் அருகிலோ, நீர்நிலைப் பகுதிகளுக்கோ அவர்கள் செல்லாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம்.
3. போதுமான அளவு உணவுப் பொருட்கள், குடிநீர், மருந்துகள் ஆகியவற்றை சரியாகப் பயன்படுத்துங்கள்.
4. மேல்நிலைத் தொட்டிகளில் நீரை நிரப்பி வையுங்கள். இதனால் மழையின் காரணமாக மின்சாரம் தடைப்பட்டால், தண்ணீருக்காக சிரமப்படத் தேவையிருக்காது.
5. எமர்ஜன்ஸி விளக்குகள், மொபைல் போன்களை சார்ஜ் செய்து வைத்திருங்கள். போதுமான அளவு மெழுகுவர்த்திகளும், தீப்பெட்டிகளும் அருகிலேயே இருக்கட்டும்.
6. வெள்ளம் ஏற்படுவது குறித்த வதந்திகளை நம்பாமல், அரசு அதிகாரிகளின் முறையான அறிவிப்பைக் கேட்டபிறகே வீட்டை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களுக்குச் செல்ல வேண்டும்.
7. போக்குவரத்துக்காக இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட சொந்த வாகனங்களைப் பயன்படுத்தாதீர்கள்.
8. அவற்றைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், மரங்களுக்கு அடியில் வாகனங்களை நிறுத்துவதைத் தவிர்க்கவும்.
9. மக்கள் மழைக்கு ஒதுங்க வேண்டிய நேரத்தில் பழைய கட்டிடங்களுக்கு அடியிலோ, மரங்களுக்கு அடியிலோ நிற்கக் கூடாது.
10. ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களையும், வீட்டுப் பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களையும் மழைநீர் புகாத உறையில் இட்டுப் பாதுகாப்பான இடத்தில் வைக்கவும்.
11. புயல் கரையைக் கடக்கும்போது வாகனத்தில் பயணிக்கூடாது. புயல் தொடர்பான எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்ட பின்னரே வாகனத்தில் பயணிக்க வேண்டும்.
12. புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் திடீரென குறையும், அதனால் புயல் கரையை கடந்துவிட்டதாக எண்ணக்கூடாது. ஏனெனில் மந்த நிலைக்குப் பின் மீண்டும் சூரைக் காற்று வீசும். புயல் கரையை கடந்து விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பின்னரே பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டும்.
13. புயல் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களையும், பீதியையும் யாரும் நம்ப வேண்டாம். அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் அறிவுரைகளுக்கு வானொலி தொலைக்காட்சி, தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முகநூல் மற்றும் ட்விட்டரை முறையாக பார்க்கவும்.
14. அடுக்குமாடி குடியிருப்பில் வாசிப்பவர்கள் தொட்டிகளில் போதுமான நீரை தேக்கி வைத்துக் கொள்வது நல்லது.
15. மழையின் போது மின்சாரம் தடைப்பட வாய்ப்புள்ளதால் மின்விளக்கு, செல்போன்களுக்கு சார்ஜ் ஏற்றி வைத்து கொள்ளவும்;
தேவையான மெழுகுவர்த்தி, தீப்பெட்டிகளை வைத்திருக்கவும்.
16. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் அதிகாரிகள் அறிவுறுத்தும் போது நிவாரண முகாம்களுக்கு செல்லவும்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications