வலுவடைந்த காற்றழுத்தம்! சென்னையிலிருந்து எத்தனை கி.மீ. தொலைவில் இருக்கு தெரியுமா?
சென்னை: வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த நிலையில் இது சென்னைக்கு 390 கி.மீ கிழக்கில் மையம் கொண்டுள்ளது.
வங்கக் கடலில் தற்போது நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தற்போது சென்னைக்கு கிழக்கே 390 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகரக் கூடும்.

இதனால் டிச.25 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புண்டு. அதிகாலையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையை பொருத்தமட்டில் ஆங்காங்கே மழைக்கு வாய்ப்புள்ளது.
இந்த புயல் சின்னம் டிச.21 ஆம் தேதி நெல்லூருக்கு கிழக்கே நிலை கொண்டிருக்கும். ஆந்திர கடல் பகுதி மேல் உயரழுத்தம் இருப்பதால் புயல் சின்னம் வடக்கு நோக்கி நகர வாய்ப்பில்லை. எனவே காற்றழுத்தமானது மீண்டும் தமிழக கடற்கரையை நோக்கி டிசம்பர் 22 ஆம் தேதி சென்னை அருகே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்த காற்றழுத்தமானது சென்னைக்கு 390 கி.மீ. கிழக்கு வடகிழக்கிலும் விசாகப்பட்டினத்திலிருந்து 420 கி.மீ தூரத்திலும், ஒடிஸாவின் கோபால்பூரில் இருந்து 610 கி.மீ. தொலைவிலும் நிலைக் கொண்டிருக்கிறது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் வடகிழக்கு திசையில் நகர்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது நாளை தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருந்த செய்திக்குறிப்பில், "புதுச்சேரிக்கு கிழக்கே நிலைகொண்டியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்), வடமேற்கு திசையில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்தது. இது வெள்ளிக்கிழமை வடக்கு திசையில், ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டி நகர்ந்தது .
இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று (டிச.20 ம் தேதி) முதல் டிச.25-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications