சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள்
சென்னை: மார்ச் தொடங்கிவிட்டாலே சென்னைவாசிகளுக்கு நடுக்கம் வந்துவிடும். அது வெயிலைப் பார்த்து மட்டுமல்ல, இறுதியில் கதவைத் தட்டப்போகும் மின்சார பில்லைப் பார்த்தும்தான். "வீட்டில் ஏசி இருக்கிறதா?" என்பது ஒரு காலத்தில் ஆடம்பரமாக இருந்தது, ஆனால் இன்றைய சென்னையின் தட்பவெப்ப நிலைக்கு அது ஒரு அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. அக்னி காற்றும், இரவில் தூங்கவிடாமல் செய்யும் புழுக்கமும் நம்மை ஏசி-யை ஆன் செய்தே ஆக வேண்டும். இன்றைக்கு சராசரியாக ஏசி பயன்படுத்தும் வீடுகளுக்கு 3000 முதல் 8000 ரூபாய் வரை வருகிறது. எனவே ஏசி பயன்படுத்தினாலும் மின்சார பில் வரக்கூடாதா.. உங்கள் வீட்டில் செய்ய வேண்டியவை பற்றி பார்ப்போம்.
பலருக்கும் ஒரு கேள்வி இருக்கும்.. சென்னையில் மட்டும் தான் வெயில் அதிகமா.. மற்ற ஊர்களில் இல்லையா என்பார்கள்.. மற்ற ஊர்களில் மக்கள் வெயிலில் இருந்து தப்பிக்க பல வழிகள் உள்ளன. முக்கியமான மக்கள் நெருக்கம் சென்னையுடன் ஒப்பிடும் போது மற்ற ஊர்களில் குறைவு. மரங்களும் மற்ற ஊர்களில் அதிகம். காடுகள் அதிகமாக இருக்கும்.. உதாரணத்திற்கு, கோவை,தேனி, திண்டுக்கல் மாவட்ட மக்கள் வெயில் அதிகம் என்றால், மலைகளில் போய் ஓய்வெடுக்க முடியும். எளிதாக வெயிலில் தப்பிக்க ஏராளமான வழிகளும் உள்ளன. ஆனால் சென்னைக்கு அப்படி எந்த வழியும் இல்லை.. ஏசி தான் ஒரே வழி..

சென்னையில் மட்டும் ஏன் இவ்வளவு வெப்பம்
சென்னை ஒரு கடலோர நகரம் என்பதால், இங்கு 'ஈரப்பதம்' மிக அதிகம். மற்ற ஊர்களில் 38 டிகிரி வெயில் அடித்தால், சென்னையில் அது 42 டிகிரி போல உணரப்படும் . இதற்குக் காரண.. நகர்ப்புற வெப்பத் தீவு போல் இருப்பது தான்.. மரங்கள் குறைந்து, எங்கும் சிமெண்ட் கட்டிடங்களும், தார் சாலைகளுமாக இருப்பதால் வெப்பம் வெளியேற முடியாமல் இங்கேயே தங்கிவிடுகிறது. பகலில் வெப்பத்தை உறிஞ்சும் கட்டிடங்கள், இரவில் அந்த வெப்பத்தை மெதுவாக வெளியிடுகின்றன. இதனால் இரவிலும் ஏசி இல்லாமல் இருக்க முடிவதில்லை.
மின்சார பில் ஏன் எகிறுகிறது?
சென்னையில் மின்சார பில் அதிகமாக வருவதற்கு முக்கியக் காரணம் 'ஸ்லாப்' முறைதான். 500 யூனிட்டுகளைத் தாண்டும்போது ஒவ்வொரு யூனிட்டிற்கும் நாம் செலுத்தும் தொகை பல மடங்கு உயர்கிறது. பழைய ஏசி மாடல்கள் மற்றும் முறையற்ற பராமரிப்பு காரணமாக, அதே குளிர்ச்சியைத் தர ஏசி அதிக மின்சாரத்தை உறிஞ்சிவிடுகிறது.
பில்லைக் குறைக்க எளிய வழிகள்
24°C - 26°C மந்திரம்: ஏசி-யை 18 டிகிரியில் வைத்தால் சீக்கிரம் குளிர்ந்துவிடும் என்பது தவறு. 24 டிகிரியில் வைத்து ஒரு சிறிய ஃபேனை ஓடவிட்டால், அறை குளிர்ச்சியாகவும் இருக்கும், மின்சாரமும் 20% வரை மிச்சமாகிவிடும்.. கோடை தொடங்கும் முன் ஏசி ஃபில்டர்களைச் சுத்தம் செய்வது கட்டாயம். தூசு அடைத்திருந்தால் கம்ப்ரஸர் அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். எனவே ஏசி ஃபில்டர்களை சுத்தம் செய்தால் கணிசமான மின்சாரத்தை சேமிக்க முடியும்.
மறைமுக வெப்பம்
ஜன்னல்களில் தடிமனான திரைகளை இடுவதன் மூலம் சூரிய ஒளி நேரடியாக அறைக்குள் நுழைவதைத் தடுத்து, ஏசி-யின் சுமையைக் குறைக்க முடியும். எளிமையாக சொல்வது என்றால், வெப்பம் படுக்கை அறைக்குள் இறங்குவதை தடுக்கும் வழிகளை பின்பற்றினாலே பாதி மின்சார கட்டணம் குறைந்துவிடும்.
'கூலிங் பெயிண்ட்'
அதேபோல் சென்னையின் கொளுத்தும் வெயிலில் இருந்து வீட்டைப் பாதுகாக்கவும், மின்சார பில்லைக் குறைக்கவும் 'கூலிங் பெயிண்ட்' அடிக்கலாம். சாதாரண சிமெண்ட் தரை அல்லது அடர் நிற பெயிண்ட் சூரிய வெப்பத்தை உள்வாங்கி, அந்த வெப்பத்தை அப்படியே கீழே உள்ள அறைக்குள் கடத்தும். ஆனால் இந்த கூலிங் பெயிண்ட், சூரிய ஒளியை சுமார் 80% முதல் 90% வரை பிரதிபலித்து திருப்பி அனுப்பிவிடும். இதனால் மொட்டை மாடியின் தரை சூடாவது பெருமளவு குறையும்.
கூலிங் பெயிண்ட் அடிப்பதன் மூலம் அறையின் உள் வெப்பநிலை சுமார் 3°C முதல் 5°C வரை குறைய வாய்ப்புள்ளது. அறை ஏற்கனவே சில டிகிரி குளிர்ச்சியாக இருப்பதால், ஏசி அந்த வெப்பநிலையை அடைய அதிக நேரம் உழைக்கத் தேவையில்லை. இதனால் ஏசி-யின் கம்ப்ரஸர் (Compressor) எடுக்கும் மின்சாரம் குறைந்து, உங்கள் மின்சார பில்லில் 15% முதல் 25% வரை சேமிப்பு கிடைக்கும்.
நிரந்தரத் தீர்வு: சோலார் மின்சாரம்
மாதம் ₹8,000 வரை மின்சாரபில் கட்டும் குடும்பங்களுக்குச் சோலார் ஒரு சிறந்த முதலீடு. வீட்டின் மொட்டை மாடியில் 3கேவி சோலார் பேனல்களைப் பொருத்தினால், பகல் நேர ஏசி பயன்பாட்டை முழுமையாகச் சோலார் மூலமே இயக்கலாம். ஆரம்பத்தில் செலவு சற்று அதிகமாகத் தெரிந்தாலும், 4 முதல் 5 ஆண்டுகளில் அந்தத் தொகை 'பே-பேக்' ஆகிவிடும். அதன் பிறகு 20 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம் போலத்தான்.
வெயில் என்பது இயற்கை, ஆனால் மின்சார பில் என்பது நாம் கையாள வேண்டிய சவால். சரியான திட்டமிடலும், சிறிய மாற்றங்களும் இருந்தால், சென்னையின் அக்னி நட்சத்திரத்தையும் நாம் நிம்மதியாகக் கடந்துவிடலாம்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications