அட்வான்சாக சம்மர் வந்துருச்சா.. ஒரு வாரம் தமிழ்நாட்டில் வறண்ட வானிலையாம்! வெயில் சுட்டெரிக்குதே
சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் ஜனவரி 29 ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஜனவரி 23 ஆம் தேதி மற்றும் ஜனவரி 24 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. ஜனவரி 25 ஆம் தேதி முதல் ஜனவரி 29 ஆம் தேதி வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை. மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்." என்று குறிப்பிட்டு உள்ளார். தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் மிக்சாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெரு மழை வெள்ளம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் பெரு மழை வெள்ளம் ஏற்பட்டது. திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் கனமழையால் சாலையில் தண்ணீர் தேங்கியது.
இருப்பினும் கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் சராசரிக்கும் குறைவான மழையே பொழிந்து இருக்கும் நிலையில் ஜனவரி மாதத்திலும் போதிய மழை இல்லாமல் கோடைகாலத்தை நினைவூட்டும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருந்தாலும் அதையெல்லாம் மறக்க வைக்கும் அளவுக்கு வெப்ப நிலையில் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக ஈரோடு, திருச்சி, தஞ்சை, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இப்போது மே மாதம் வந்துவிட்டதா என சந்தேகிக்கும் அளவுக்கு வெப்பம் நிலவுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications