உயிரை பணயம் வைத்து வேலை பார்க்கும் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்! இரவிலிருந்து நான் ஸ்டாப் ஒர்க்!
சென்னை: மிக் ஜாம் புயலால் நேற்றிரவு முதல் சென்னையில் மிக கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மாநகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்காதவாறு பம்புசெட் மூலம் வெளியேற்றி வருவதுடன் சாலைகளில் முறிந்து விழும் மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளை நான் ஸ்டாப்பாக செய்து வருகின்றனர். இதனிடையே இன்று இரவு வரை சென்னையில் மிக கனமழை பெய்யக் கூடும் என்பதால் இன்னும் பாதிப்புகள் மோசமாக இருக்கும் எனத் தெரிவிகப்படுகிறது.

வீட்டை தண்ணீர் சூழ்ந்துகொண்டதாக கோபத்தை வெளிப்படுத்தும் பலரும், சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருபவர்களும் நம்மை போன்ற மனிதர்கள் தான் என்பதை சிந்தித்து பார்ப்பதில்லை. புதிய வீடுகளை வாங்கும் போதோ, கட்டும் போதோ அந்த இடம் நீர்நிலைகள் இருந்த பகுதியா, வடிகால் பாதை உள்ளதா என்பதையெல்லாம் ஆராய தவறியதன் விளைவே இன்று சென்னை புறநகர் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்திருப்பதற்கு காரணமாகும்.
சென்னையில் மட்டும் 162 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1 நிவாரண முகாமில் 348 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், மருத்துவ வசதிகளை அரசு முழு வீச்சில் செய்து கொடுத்து வருகிறது. இன்றைய பொழுதும், நாளைய பொழுதும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள 4 மாவட்ட மக்களுக்கு சவாலாகமே அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
புயல், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் TNSMART செயலி மூலமாகவும், Twitter, Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்கி வருகின்றன. அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் நேற்று காலை முதல் அங்கேயே முகாமிட்டுள்ளார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications