தொடர் மழை எதிரொலி.. கடலூரில் சில பகுதிகளிலும் விழுப்புரத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!
விழுப்புரம்: கடந்த சில நாட்களாகவே விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில், நாளைய தினம் (டிச. 4) மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கடலூர் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றையொட்டி அமைந்துள்ள பண்ருட்டி, அண்ணாகிராமம் கடலூர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே பெஞ்சல் புயல் காரணமாகத் தமிழ்நாட்டில், அதுவும் வடதமிழக பகுதிகளில், கனமழை கேப் விடாமல் கொட்டி தீர்த்தது. பெஞ்சல் புயல் கரையைக் கடந்த பிறகும் கூட கனமழை வெளுத்து வாங்கியது.

இந்த கனமழையால் வடதமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதிலும் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்ததால் பாதிப்பு மோசமாக இருந்தது. இப்போது தான் மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று அதிகாரிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே தொடர் கனமழை காரணமாக விழுப்புரத்தில் நாளை (டிச. 4) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார். அதன்படி நாளை விழுப்புரத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படாது. பல பகுதிகளில் மழை வெள்ளம் வடியாததால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல கடலூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் அமைந்துள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பண்ருட்டி, அண்ணாகிராமம், கடலூர் ஆகிய மூன்று பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் அருகே அமைந்துள்ளதால் இந்த பகுதிகளில் மட்டும் நாளை (டிச.4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications