Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெள்ள பாதிப்பிலிருந்து மெல்ல மீளும் தென் தமிழகம்.. 3 மாவட்ட மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்னும் முழுமையாக வடியவில்லை. வெள்ள பாதிப்புகள் தொடரும் நிலையில், நாளை(டிச.20) தென் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த சில நாட்களாக தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களில் இந்த மழை வேகமெடுத்தது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் சட்டென நிரம்பின. மட்டுமல்லாது அதிலிருந்து வெளியேறிய உபரிநீர் ஊருக்குள் பாய்ந்திருக்கிறது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களின் பெரும்பாலான கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருக்கின்றன.

 Due to rain and flood, schools and colleges in Tuticorin and Tirunelveli districts will be closed tomorrow

நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் படகுகள் மூலமாக கூட மக்களை மீட்க முடியவில்லை. எனவே கடற்படையின் ஹெலிகாப்டர் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கிறது. ஆனால் தற்போது ஒன்றிரண்டு ஹெலிகாப்டர்கள் மட்டுமே மீட்பு பணியில் இருப்பதால் இது போதுமானதாக இல்லையென பொதுமக்கள் கூறியுள்ளனர். கூடுதல் ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 40 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தாமிரபரணி ஆற்றிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி நகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இன்று தூத்துக்குடியில் மழை இல்லை என்றாலும் தேங்கி நின்ற வெள்ளம் இன்னும் வடியவில்லை. வெள்ளத்தில் சில வீடுகள் இடிந்து விழுந்திருக்கின்றன. பைக்குகள், கார்கள், பேருந்துகள் என அனைத்து வகை வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.

மழை வெள்ளம், பல்வேறு இணைப்பு சாலைகளை துண்டித்திருப்பதால் மீட்புகளில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. வெள்ள நீரின் வேகம், நேற்றைவிட இன்று ஓரளவு குறைந்திருப்பதால் மீட்பு படையினர் படகு மூலம் மக்களை மீட்க போராடி வருகின்றனர். தற்போது வரை மீட்கப்பட்டிருப்பவர்கள் திருமண மண்டபங்களிலும், அரசு கட்டிடங்களிலும் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. பால், குடிநீர் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் அறிவிப்பு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+