Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இடுப்பளவு வெள்ளம்.. பச்சிளம் சிசுவுடன் திணறும் தாய்மார்கள்! தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: கடந்த இரண்டு நாட்களாக தென் மாவட்டங்களில் பெய்த கனமழை வௌ்ள பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்பு பகுதிகள் மட்டுமல்லாது அரசு மருத்துவமனையிலும் வெள்ளம் சூழ்ந்ததால் நோயாளிகள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை காலங்கள் ஏறத்தாழ முடியும் தருவாயில் இருந்த நிலையில், திடீரென தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய தொடங்கியது. இது கடந்த 2 நாட்களாக தீவிரமடைந்ததால், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நீர் நிலைகள் வேகமாக நிரம்பின. ஒரு கட்டத்தில் இந்த நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. எனவே பல்வேறு கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டன.

 Due to the flooding of Thoothukudi Government Hospital, the patients were severely affected

மின்சாரம், குடிநீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கிராமப்புறங்களை விட நகர் பகுதிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் தனியார் பேருந்து நிறுவனங்கள், இந்த மழை வெள்ளம் காரணமாக தென் மாவட்டங்களுக்கான பேருந்து போக்குவரத்தை ரத்து செய்திருக்கின்றன. எனவே சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு சென்று, உறவினர்களின் நிலையை அறிந்துகொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.

மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்கவும், அப்பகுதிகளுக்கு சென்று நேரடி ஆய்வை மேற்கொள்ளவும் அமைச்சர்களுக்கும், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நேற்றைய நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93.2 செமீ மழையும், ஸ்ரீவைகுண்டத்தில் 61.8 செமீ மழையும், திருச்செந்தூரில் 67.9 செமீ மழையும் பதிவாகியுள்ளது. மழை வெள்ளம் காரணமாக இணைப்பு சாலைகள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. எனவே பேருந்துகள் செல்ல முடியாத இடங்களுக்கு படகுகள் மூலம் சென்று மீட்பு படையினர், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வெள்ளத்தில் சூழ்ந்ததை போல, பல்வேறு அரசு அலுவலகங்களும் நீரில் சூழ்ந்திருக்கிறது. தூத்துக்குடியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மழைநீர் அதிக அளவு சூழ்ந்திருக்கிறது. இங்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு குடிநீர், உணவு கிடைப்பதில் சிக்கில் ஏற்பட்டது. எனவே அவர்கள் மருத்துவமனையைவிட்டு வெளியேறி வருகின்றனர்.

புதியதாக குழந்தையை பிரசவித்த தாய்மார்களும், மருத்துவமனையைவிட்டு இடுப்பளவு வெள்ள நீரில் பச்சிளம் குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியேறி வருகின்றனர். நடக்கவே முடியாத நோயாளிகள் சிலர் இன்னும் மருத்துவமனையிலேயே சிக்கியுள்ளனர். எனவே மருத்துவமனையை சுற்றியுள்ள நீரை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், உள்ளே சிக்கியுள்ள நோயாளிகளுக்கு குடிநீரும், பாத்ரூம் பயன்பாட்டுக்கு நீரும் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக 4 மாவட்டங்களிலும் வெள்ளம் ஓரளவு குறைந்துள்ள நிலையில், மீட்பு பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. சாலைகள் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகுகள் மூலம் குடிநீர், உணவு விநியோகிக்கப்பட்டு வருகிறது என மீட்பு படையினர் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+