சென்னையில் திடீர் மாற்றம்.. இயல்பை விட மளமளவென குறைந்த வெப்பநிலை.. ஹேப்பியான மக்கள்.. காரணம் இதுதான்
சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்திருப்பதால், வெப்பநிலை வெகுவாக குறைந்திருக்கிறது. இன்று 11 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில்தான் வெயில் அதிகரிக்கும். ஆனால், இந்த முறை பிப்ரவரி இறுதியிலேயே வெயில் வாட்ட தொடங்கிவிட்டது. கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கை கொடுத்தாலும், இந்த ஆண்டின் கோடை காலம் வறட்சியை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மழை குறித்து மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. வட தமிழகத்திலும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. எனவே வெப்பம் குறைந்திருக்கிறது.
முன்னதாக இன்று காலை வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, தென்காசி, திருநெல்வேலி, நீலகிரி, கோவை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும்.
நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் என 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும். நாளை மறுநாள் அதாவது மே 10ம் தேதி நீலகிரி, கோவை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருப்பூர் என 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
மே.11ம் தேதியை பொறுத்த வரை கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி என 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வெப்ப நிலையை பொறுத்த அளவில், 12ம் தேதி வரை அடுத்த 5 தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும். அதேபோல தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2º-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 40° -41° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38-39° செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35-37* செல்சியஸ் இருக்கக்கூடும்.
ஈரப்பதத்தை பொறுத்த அளவில், 12ம் தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 40-55% ஆகவும், மற்ற நேரங்களில் 50-85% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 55-85% ஆகவும் இருக்கக்கூடும். 09ம் தேதி வரை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசெளகரியம் ஏற்படலாம்" என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று 11 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது. அதாவது,
கரூர் பரமத்தி - 106
ஈரோடு - 106
மதுரை விமான நிலையம்- 105
திருச்சி - 103
மதுரை நகர் - 103
நாமக்கல் - 102
பாளையங்கோட்டை - 102
கோவை - 101
திருப்பத்தூர் - 101
சேலம் - 100
திருத்தணி - 100
என வெயில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெயில் பதிவாகி வந்த நிலையில், இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் 96 டிகிரியும், கோடம்பாக்கத்தில் 99 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட தலா 1, 0.5 சதவிகிதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications