‛‛400-500 மிமீ மழைக்கு வாய்ப்பு’’.. வெள்ளத்தில் மூழ்கும் கேரளா? பெங்களூருவுக்கும் கனமழை ‛வார்னிங்’
திருவனந்தபுரம்: வரும் 17 ம் தேதி முதல் 22ம் தேதி வரை கேரளாவில் மிககனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும், 400 முதல் 500 மில்லிமீட்டர் வரையிலான மழை பதிவாகலாம் என்றும் பரபரப்பான வார்னிங் வெளியாகி உள்ளது. அதேபோல் கர்நாடகா தலைநகர் பெங்களூரிலும் கேரளாவை விட சற்று குறைவாக மிககனமழைக்கு வாய்ப்புள்ளது என முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நம் நாட்டில் கோடைகாலம் நடந் வருகிறது. ஆனாலும் கூட தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த 4ம் தேதி கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது.

இதனால் வெயில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோடை மழை வந்து குளிர்ச்சியை தந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை இன்று முதல் வரும் 19ம் தேதி வரை 26 மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி,திருப்பத்தூர். கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் அண்டை மாநிலமான கேரளாவிலும் பல இடங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி பல மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளைய தினம் பத்தனம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி மாவட்டங்களுக்கும், நாளை மறுநாள் (மே 17)ல் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வரும் 18 ம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், ஆழப்புழா, கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, எர்ணாகுளம், 19ம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், ஆழப்புழா, கோட்டயம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் மும்பை ரெயின்ஸ் என்ற எக்ஸ் வலைதள பக்கத்தில் கேரளா மாநிலத்துக்கான வெள்ள எச்சரிக்கை பற்றி பரபரப்பான தகவல் கூறப்பட்டுள்ளது. இந்த எக்ஸ் பக்கத்தில் மும்பை மாநகரின் மழை நிலவரம் குறித்த முன்னறிவிப்புகள் பதிவிடப்பட்டு வருகின்றன. அதுதவிர நாட்டின் பிற நகரங்களில் நடக்கும் காலநிலை மாற்றம் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் கேரளாவில் வெள்ள அபாய எச்சரிகை பற்றி அந்த பக்கத்தில், ‛‛தென்இந்தியாவுக்கு வெள்ள எச்சரிக்கை: நாளுக்கு நாள் தென்இந்தியாவுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பெங்களூர் மற்றும் கேரளாவை கூறலாம். இசிஎம்டபிள்யூஎஃப் ஃபோர்காஸ்ட் (ECMWF Forecast)கணிப்பின்படி மே 17 முதல் 22ம் தேதி வரை 400 முதல் 500 மில்லிமீட்டர் வரையிலான அதிககனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது கேரளாவின் கடலோர மாவட்டத்துக்கு பொருந்தும். மாறாக கேரளாவை விட பெங்களூரில் சற்று குறைவாக மழை பெய்யும். கவனமாக இருங்கள் மக்களே'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை போல் கர்நாடகா தலைநகர் பெங்களூரிலும் தற்போது கோடை மழை பெய்ய தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் வரும் 17 ம் தேதி முதல் 22ம் தேதி வரை பெங்களூரிலும் மிக கனமழை பெய்யும் என மும்பை ரெயின்ஸ் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications